சீக்கிரமா ஒப்பந்தத்துக்கு வாங்க.. இல்லையெனில் இன்னும் வரியை அதிகரிப்பேன்.. எச்சரிக்கும் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தக போர் சற்றே தளர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது. ஆமாங்க.. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செப்டம்பர் 1 முதல், 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனா இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவிகித வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.

மேலும் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், விரைவாக வர்த்தக ஓப்பந்தத்தை மேற்கொள்ள தவறினால், இந்த வரி உயர்வு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

கிட்டதட்ட சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இந்த வர்த்தக போர் உலகளாவிய வினியோக சங்கிலியை சீர்குலைத்ததோடு, சர்வதேச அளவில் பொருளாதாரத்தையும் உலுக்கியது. இந்த நிலையில் இந்த எச்சரிக்கை ஒரு தற்காலிக உடன்படிக்கைக் ஏற்படுத்தும் எச்சரிக்கையாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 ஒப்பந்தம் போட விரும்புகிறது

ஒப்பந்தம் போட விரும்புகிறது

இது குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்காவோடு ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதை அவர் வெளிப்படையாக கூறவில்லை. மேலும் இதற்கான நடவடிக்கையையும் வேகமாக அவர் எடுக்கவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

 மேலும் கட்டணத்தை உயர்த்த முடியும்

மேலும் கட்டணத்தை உயர்த்த முடியும்

இந்த வாரம் ஷாங்காயில் நடந்த அமெரிக்கா - சீனா பேச்சு வார்த்தை சரியான முன்னேற்றம் இல்லாதது குறித்து, தனது உயர்மட்ட அதிகாரிகள் வர்த்தக பேச்சு வார்த்தை குறித்து அவருக்கு விளக்கமளித்த பின்னர், தொடர்ந்து டிரம்ப் இவ்வாறு டிவிட்டரில் தனது அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக பேச்சு வார்த்தைகள் முன்னேற தவறினால், கட்டணங்களை மேலும் உயர்த்த முடியும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

 அதிகாரிகள் டிரம்பிற்கு விளக்கம்

அதிகாரிகள் டிரம்பிற்கு விளக்கம்

இந்த நிலையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் ஆகியோர் சீன அதிகாரிகளுடனான சந்திப்பில், கடந்த ஜூன் மாத இறுதியில் ஜப்பானில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில், ட்ரம்பும் சீனாவின் ஜனாதிபதியும் நேருக்கு நேர் சந்தித்தது பேசியது முதல் வர்த்தக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது வரை பேசியதாக டிரம்பிற்கு விளக்கமளித்துள்ளனர்.

 ஒப்பந்தம் போடும் வரை வரி விதிப்போம்

ஒப்பந்தம் போடும் வரை வரி விதிப்போம்

இந்த நிலையில் டிரம்ப் இது குறித்து கூறுகையில், என் மக்கள் வீட்டிற்கு வந்த போது, நாங்கள் பேசுகிறோம், செப்டம்பர் தொடக்கத்தில் எங்களுக்கு மற்றொரு கூட்டம் உள்ளது என்றும் சொன்னார்கள். நான் சொன்னேன் அது நல்லது, ஆனால் ஒரு ஒப்பந்தம் போடும்வரை, நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கிறோம் என்றும் டிரம்ப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

 வர்த்தக குழுக்கள் அதிருப்தி

வர்த்தக குழுக்கள் அதிருப்தி

இந்த நிலையில் சீனாவில் உள்ள அமெரிக்க வர்த்தக குழுக்கள், டிரம்ப்பின் இந்த கட்டணங்கள் குறித்த சமீபத்திய அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனவாம். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க - சீன வர்த்தக கவுன்சில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சீனாவை இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தையிலிருந்து வெளியேற்றலாம் என்றும் கூறியுள்ளதாம்.

 இதை பற்றியெல்லாம் நாங்கள் கவலை கொள்கிறோம்

இதை பற்றியெல்லாம் நாங்கள் கவலை கொள்கிறோம்

மேலும் அதிகரித்த ஒழுங்கு முறைவு ஆய்வு, உரிமங்களில் தாமதம் மற்றும் ஒப்பந்தம், அரசாங்க கொள்முதல் டெண்டர்களில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாடு இது போன்ற சிலவற்றை பற்றி தான் நாங்கள் கவலைபடுகிறோம் என்றும் அமெரிக்கா சீனா வர்த்தக கவுன்சிலின் தலைவர் கிரேக் ஆலன் கூறியுள்ளார்.

 அமெரிக்கா குடும்பங்களை பிணையக் கைதிகளாக பயன்படுத்துகிறார்.

அமெரிக்கா குடும்பங்களை பிணையக் கைதிகளாக பயன்படுத்துகிறார்.

மேலும் அமெரிக்காவின் இந்த புதிய கட்டணங்கள் பள்ளிக்கு பொருட்கள் வாங்கும் பருவத்தின் தொடக்கத்தில் துவங்கும், இது நுகர்வோருக்கான விலையை உயர்த்தும் என்றும், நான்கு பெரிய சில்லறை வர்த்தக சங்கங்கள் கடந்த வியாழக்கிழமையன்று தெரிவித்துள்ளனவாம். இந்த நிலையில் ஜானாதிபதி டிரம்ப் தனது வர்த்தக யுத்த பேச்சு வார்த்தைகளில் அமெரிக்க குடும்பங்களை பிணையக் கைதிகளாகப் பயன்படுத்துகிறார் என்றும், அமெரிக்காவின் காலணி வினியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் தலைவர் மாட் பிரீஸ்ட் கூறியுள்ளார்.

 டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கர்களை தான் அதிகம் பாதிக்கும்

டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கர்களை தான் அதிகம் பாதிக்கும்

American Apparel & Footwear Associationனின் நிர்வாக துணைத் தலைவர் ஸ்டீபன் லாமர் இது குறித்து கூறுகையில், அமெரிக்கா - சீனா வர்த்தக பேச்சு வார்த்தை குழுவில் தனது குழுவின் உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை என்று அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றும், டிரம்பின் இந்த நடவடிக்கை சீன உற்பத்தியாளர்களை விட, அமெரிக்கர்களைத் தான் அதிகமாக பாதிக்கும். ஏனெனில் சீனர்கள் அமெரிக்காவில் வாங்கிய 42 சதவிகித ஆடைகளையும், 69 சதவிகித காலணிகளையும் அமெரிக்காவில் இருந்தே வாங்குகிறார்கள் என்றும் லாமர் குறிப்பிட்டுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+