ஜோ பைடனை எதிர்த்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தைவான் நாட்டை குறித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தைவான் நாட்டை எப்போது சீனா தாக்கும் என்ற அச்சம் ஒருபக்கம் இருக்கும் வேளையில், டிரம்ப்-ன் பேச்சு மொத்த கதையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
சீனா தைவான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நாடு என்று கூறுகிறது, ஆனால் தைவான் நாங்கள் சுதந்திர நாடு என்றும் பேசுகிறது. இதற்கிடையில் சீனா தைவான் நாட்டை கைப்பற்றும் முயற்சியில் இறங்கிய போது, அமெரிக்க அரசும், அதன் நடப்பு நாடுகளும் தைவான்-க்கு உறுதுணையாக இருந்தது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பிசினஸ்வீக்கிற்கு டொனால்டு டிரம்ப் அளித்த பேட்டியில், சீனாவிற்கு எதிராகத் தைவானை அவர் பாதுகாப்பாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் பேசியது தான் தற்போது தென்கிழக்கு நாடுகள் மத்தியிலும், சிப் நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டிற்கு அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்புக்காகப் பணம் செலுத்த வேண்டும் என்று தான் கருதுவதாகக் கூறினார் டொனால்டு டிரம்ப். தைவான் நாடு "அமெரிக்காவுக்கு எதையும் கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
தைவான் நாட்டிற்கு அமெரிக்கா ஒரு காப்பீட்டு நிறுவனம் போன்றது, ஆனால் தைவான் அமெரிக்காவுக்கு எதையும் கொடுக்கவில்லை, இதற்கு மாறாக அமெரிக்காவின் 100 சதவீத சிப் வர்த்தகத்தைத் தைவான் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் தைவான் செமிகண்டக்டர் துறையில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் உலகிலேயே வேறு எந்த நாட்டிடம் இல்லாத அதிநவீன சிப் தயாரிப்பு தொழில்நுட்பத்தை வைத்துள்ளது. இதை வாயிலாக அமெரிக்காவின் ஒட்டுமொத்த சிப் வர்த்தகத்தைத் தைவான் நிறுவனங்கள் எடுத்துக்கொண்டதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனங்கள் புதன்கிழமை வர்த்தகத்தில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக ASML ஹோல்டிங் நிறுவனம் சுமார் 9 சதவீதம் சரிந்துள்ளது, பிரபலமான என்விடியா 4 சதவீதமும், AMD 6.3 சதவீதமும், இதைத் தொடர்ந்து Qualcomm, Micron Technology, Broadcom, Arm Holdings ஆகியவை 5 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
மறுமுனையில் அமெரிக்காவின் இன்டெல் 5 சதவீதமும், குளோபல் பவுண்டரிஸ் என்ற சிறிய உற்பத்தி நிறுவனம் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலே குறிப்பிட்டு உள்ள அனைத்து நிறுவனங்களும் தைவானில் தனது உற்பத்தி சப்ளையர்களை வைத்துள்ளதன் விளைவாகத் தான் சரிவடைந்துள்ளது.
தைவான் நாட்டின் மிகப்பெரிய செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான Taiwan Semiconductor Manufacturing Co (TSMC) உலகளவில் தயாரிக்கப்படும் மேம்பட்ட செமிகண்டக்டர் சிப்-களில் சுமார் 66 சதவீதம் பங்கீட்டை கொண்டுள்ளது. இது அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், என்விடியா போன்றவற்றுக்கு முக்கிய சப்ளையராக உள்ளது.
இதேவேளையில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு துறையில் அமெரிக்காவின் பங்கீடு வெறும் 6 சதவீதம் மட்டுமே. டொனால்டு டிரம்ப் பேச்சுக்குப் பின்பு TSMC நிறுவனப் பங்குகள் 2.4 சதவீதம் தைவான் பங்குச்சந்தையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications