வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2004 ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ்க்கு அடுத்தபடியாக மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்ற அதிபர் என்ற பெருமை டொனால்ட் டிரம்புக்கு கிடைத்துள்ளது.
நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து வாக்குகளும் எண்ணப்பட்டு விட்டன. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பின்னுக்கு தள்ளி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

பொதுவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகளில் 270க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றுபவரே அதிபராக தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் டிரம்ப் பெரும்பான்மை வெற்றியை பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மற்றொரு சாதனையை புரிந்து இருக்கிறார் .அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் போது வேட்பாளருக்காக மக்கள் வாக்களிக்கும் நடைமுறையும் இருக்கிறது. இதனை பாப்புலர் ஓட் (popular vote) என அழைக்கிறார்கள்.
அதாவது மக்களிடையே பெரும்பான்மை பெற்ற வாக்காளர். அந்த வகையில் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு பெற்ற வேட்பாளர் என்ற பெருமையும் தற்போது டொனால்ட் டிரம்புக்கு கிடைத்துள்ளது. தேர்தலில் மக்களின் 51% வாக்கு டிரம்புக்கு கிடைத்துள்ளது, கமலா ஹாரிஸுக்கு 47.5 % வாக்கு கிடைத்துள்ளது. டிரம்புக்காக 71.7 மில்லியன் வாக்குகளும், கமலா ஹாரிஸுக்காக 66.9 மில்லியன் வாக்குகளும் கிடைத்துள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 286 எலக்ட்ரால் வாக்குகளையும் 6.2 கோடி பொதுமக்கள் வாக்குகளையும் பெற்றிருந்தார்.அந்த வகையில் இரண்டு வழிகளிலுமே அதிக வாக்கு பெற்ற நபர் என்ற பெருமை ஜார்ஜ் டபிள்யூ புஷ்க்கு கிடைத்திருந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்புக்கு அந்த பெருமை கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை அதிகமாக பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் அதிபராகி விட முடியாது. எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் அவருக்கு 270க்கும் மேல் இருந்தால் மட்டுமே அதிபராக முடியும்.
அந்த வகையில் பார்க்கும்போது 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களின் பெருவாரியான வாக்குகளை பெற்ற வேட்பாளராக ஹிலரி கிளின்டன் , ஆனால் எலக்ட்ரோல் காலேஜ் அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் பதிக வாக்குகளை பெற்றதால் அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
நடப்பு அதிபர் தேர்தலை பொருத்தவரை மக்களின் பெரும்பான்மையான வாக்குகளும் டொனால்ட் டிரம்புக்கு கிடைத்துள்ளது என்பதால் அவர் புது உற்சாகத்துடன் இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications