சீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் டிரம்ப்.. அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள விருப்பம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸால், இன்று உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

 

அதிலும் அமெரிக்காவில் தான் இதன் பாதிப்பு மிக அதிகம். அது மக்கள் பாதிப்பிலும் சரி, பொருளாதாரம், வேலையிழப்பு என பலவற்றிலும் முதன்மையாக இருந்து வருகிறது.

இதுவே அமெரிக்கா சீனாவின் மீது கோபம் கொள்ள முக்கிய காரணமாக அமைந்துள்ளது எனலாம்.

உறவைக் முறித்துக் கொள்ள விருப்பம்

உறவைக் முறித்துக் கொள்ள விருப்பம்

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று பாக்ஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், சீனாவுடனான அனைத்து உறவுகளைத் முறித்துக் கொள்ள விரும்புவதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். மேலும் சீனா கொரோனா வைரஸினை பரப்பியதற்காக, தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும், சீனாவினை தகர்த்தெறிவதற்கான வழிகளை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு இவ்வளவு மிச்சம்?

எங்களுக்கு இவ்வளவு மிச்சம்?

மேலும் நீங்கள் இதை செய்தால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு? சீனாவுடன் முழு உறவினையும் துண்டித்துவிட்டால், 500 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தமுடியும் என்றும் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த வைரஸின் தாக்கம் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.

சீனா தான் காரணம்
 

சீனா தான் காரணம்

அதனை சீனா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என கடந்த பல வாரங்களாகவே, சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க அதிக அழுத்தங்களை கொடுத்து வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். சீனாவின் செயலற்ற தன்மையால், கொரோனா வைரஸ் வுஹானிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ளது என்று அவர்களின் டிரம்ப் குழுவினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இன்னும் இத்தனை பேர் இறக்கலாம்

இன்னும் இத்தனை பேர் இறக்கலாம்

தற்போது அமெரிக்கா, கொரோனாவால் அமெரிக்கா பொருளாதாரத்திற்கும், மனிதர்கள் வாழ்விற்கும் ஏற்படுத்திய சேதத்திற்கும் எதிராக, சீனா மீது அமெரிக்கர்கள் வழக்கு தொடர உரிமை வழங்க முடியும். ஏற்கனவே அமெரிக்கா 84,000 இறப்புகளை பதிவும் செய்துள்ளது. இது மிகப்பெரிய ஒன்றாகும். இன்னும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1,47,000 பேர் இறப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவினால் ஏமாற்றம் தான் மிச்சம்

சீனாவினால் ஏமாற்றம் தான் மிச்சம்

இந்த நிலையில் அமெரிக்கா பொருளாதாரத் தடை மற்றும் பயணத் தடைகளையும் கூட விதிக்கக்கூடும். அதே நேரத்தின் அமெரிக்க வணிகங்கள் சீன நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதையும் தடுக்க முடியும். நான் சீனாவினால் மிகவும் ஏமாற்றமடைகிறேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளதாக மற்றொரு ஆங்கில செய்தி ஒன்று கூறியுள்ளது.

கணக்கியல் தரம்

கணக்கியல் தரம்

அதே போல அமெரிக்க பங்கு சந்தைகளில் சீன நிறுவனங்களை பட்டியிலிடுவதற்கு முன்னர், அவற்றின் கணக்கியல் தரங்களை கட்டாயமாக அமெரிக்காவின் தரங்களை பின்பற்றுமாறும் அமெரிக்கா கட்டாயப்படுத்தக்கூடும். ஆனால் இது தற்போது தேவையில்லை. அது முதலீட்டாளர்களின் இழப்புக்கு வழி வகுக்கும். ஆனால் அமெரிக்கா இதுபோன்ற தடையை கொண்டு வரும் போது அவர்களில் பலர் ஹாங்காங் அல்லது லண்டனிற்கு செல்லக் கூடும் என்பதையும் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியல்

அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியல்

கடந்த 2019ம் ஆண்டில் தொடக்கத்தில் 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சீன நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தைகளில் பட்டியிலிடப்பட்டன என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இதே மற்றொரு ஆங்கில செய்தியில் டிரம்ப் தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க விரும்பவில்லை, அவருடன் பேச விரும்பவில்லை என்று கூறியதாக வெளியாகியுள்ளன.

சீனா அனுமதிக்கவில்லை

சீனா அனுமதிக்கவில்லை

எப்படி இருப்பினும், ஜின்பிங்குடன் நல்ல உறவைக் தான் கொண்டுள்ளதாகக் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் சீனா தன்னை ஏமாற்றியுள்ளது என்றும், கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க வுஹானின் ஆய்வகத்தை பார்வையிட சர்வதேச சமூகத்தை அனுமதிக்குமாறு அமெரிக்கா பலமுறை சீனாவிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதை சீனா ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald trump slams china, we could cut off the whole relationship

Amerikca president Donald trump said he is eyeing ways to crack down china, also he told we could cut off the whole relationship.
Story first published: Friday, May 15, 2020, 11:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X