என்ன ஈரான்.. சொன்னா கேட்கமாட்டீங்க.. எதுக்கும் எச்சரிக்கையா இருங்க..இதுல எதும் உள் குத்து இல்லையே..

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் விட்ட குறை தொட்ட குறையாக பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே தான் இருந்து வருகிறது. ஒரு புறம் ஈரான் விட்டாலும், அமெரிக்கா விடுவதாக இல்லை. ஈரான் அமெரிக்காவை சீண்டிப்பார்ப்பதும், அமெரிக்கா ஈரானை சீண்டிப் பார்ப்பதும், அப்படி ஒரு அலாதி பிரியம் இந்த இரு நாடுகளுக்கும்.

அமெரிக்கா, என்று அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியதோ அன்றிலிருந்தே, ஈரானுக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை கொடுத்து வருகிறது. அதிலும் தான் மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளும் ஈரானுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதைக் குறிக்கோளாய் வைத்துள்ளது.

ஒரு புறம் ஈரானிடம், இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் எண்ணெய் வாங்க கூடாது என்றும், அதன் மூலம் ஈரானை இன்னும் பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளவும் திட்டம் வகுத்தது அமெரிக்கா.

அணு ஆயுத உற்பத்தி வேண்டாம்?

அணு ஆயுத உற்பத்தி வேண்டாம்?

அப்படி மிரட்டினாலாவது, ஈரான் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுமா? என்று எதிர்பார்த்தது அமெரிக்கா. ஆனால் ஈரானோ நீ என்ன வேண்டுமானலும் செய்து கொள் நான் இதற்கெல்லாம் அசைய மாட்டேன் என்கிற தோனியில், ஆமாம் நான் அப்படிதான் செய்வேன் என்று செய்து வருகிறது. ஏன் தற்போது கூட ஒப்பந்தத்தில் உள்ள அளவை விட செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி அதிகரிக்க போவதாகவும், ஒப்பந்தத்தில் உள்ள அளவை விட தன்னிடம் உள்ளது என்றும் அறிக்கை விடுத்துள்ளது ஈரான்.

என்ன வேணா பன்னிக்கோ?

என்ன வேணா பன்னிக்கோ?

ஒரு புறம் அமெரிக்கா ஈரானை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே தான் போகிறதே தவிர. இதில் குறைந்தபாடில்லை. அமெரிக்காவும் முதல் முறை பிரச்சனை ஏற்பட்ட போதே ஈரான் மீது முதல் முறையாக பொருளாதார தடையை விதித்தது. இந்த நிலையில் கடும் எரிச்சலடைந்தது ஈரான் எங்க மேலயே பொருளாதார தடையா என்ற கடுப்பில் இருந்து வந்தது.

கப்பல்கள் தாக்கம்?

கப்பல்கள் தாக்கம்?

ஒரு புறம் அமெரிக்காவின் எண்ணெய் கப்பல்களும், மறுபுறம் ஜப்பானின் எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டன. இதற்கு காரணம் ஈரான் தான் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் ஈரானோ எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமில்லை என்று கூறி வந்தது. இந்த நிலையில் தான் ஈரானின் எல்லையில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டு ஈரானை வேவு பார்த்து வந்தன. இதை பார்த்த ஈரான், தனது போர்க்கப்பல்களையும் தனது எல்லையில் நிறுத்தி கண்கானித்து வந்தது. அதேசமயம் ஈரான் வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு பொசுக்கியது ஈரான்.

அடுத்த என்ன செய்ய திட்டம்?

அடுத்த என்ன செய்ய திட்டம்?

இதனால் கடும் கோபம் கொண்ட டிரம்ப், ஈரானின் மீது தாக்குதல் நடத்த தயாரானதும், கடைசி நேரத்தில் தாக்குதலை தடுத்து நிறுத்தியதும் குறிப்பபிடத்தக்கது.. இந்த நிலையில் தான், இரண்டாவது முறையாக ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை அதிகரிக்க போவதாகவும், அதோடு கையிருப்பு ஒப்பந்த அளவை விட அதிகம் இருப்பாதாகவும், அறிக்கையில் கூறியதோடு அனைவரையும் பயமுறுத்தியும் வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் ஈரானை ஒப்பந்தத்தை மீறி ஈரான் யுரேனியம் உற்பத்தி செய்வதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

கவனமாக இருங்கள்?

கவனமாக இருங்கள்?

இந்த நிலையில் தற்போது அமெரிக்கா, ஈரானை எதற்கும் சற்று கவனமாகவே இருங்கள் என்று தற்போது எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதில், ஈரான் அதன் ஒப்பந்த அளவை மீறி யுரேனியம் கையிருப்பு வைத்திருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. எதற்கும் ஈரான் சற்று பாதுகாப்பாகவே இருக்க வேண்டும். ஈரானின் இந்த அணுசக்தி விரிவாக்க, அதனையே பாதிக்கும் என்றும், இதனால் ஈரான் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பொருளாதார தடைக்கு வழிவகுக்கும்?

மேலும் பொருளாதார தடைக்கு வழிவகுக்கும்?

ஈரானின் இத்தகைய செயல்கள், ஈரானை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும், அதோடு ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஈரானுக்கு இது மேலும் பொருளாதார தடை விதிக்கும் அளவுக்கு வழி வகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப். அதோடு ஈரானின் அணு ஆயுத இருப்பு, ஈரானை மட்டும் அல்லாமல்" மற்ற நாடுகளையும் " பாதிக்கும் என்பதை ஈரான் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+