துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அருகே புதன்கிழமை காலை இரண்டு டிரோன்கள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க படைகளை தாக்குவதற்காக ஈரான் ஏவுப்பட்ட டிரோன்களை UAE ராணுவ ஏவுகனை கொண்டு தாக்கி வருகிறது.
இந்த தாக்குதலில் 100க்கு 90 டிரான் தடுக்கப்பட்டாலும் சில பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் பெரும்பாலான பாதிப்புகள் விண்ணில் ஏவுகணை கொண்டு தாக்கப்பட்ட டிரோன்களின் எச்சம் தான் விழுகிறது. இப்படி விழுந்த 2 டிரோன் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அருகே விழுந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு கானா நாட்டவர்களுக்கும், ஒரு பங்களாதேஷ் நாட்டவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு இந்தியருக்கு சிறிய அளவிலான காயங்களும் ஏற்பட்டுள்ளது. துபாய் மீடியா ஆபிஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) விமான போக்குவரத்து சீராக இயங்கி வருகிறது. எந்த பெரிய சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய சர்வதேச பயணிகள் விமான நிலையங்களில் ஒன்றாகும். எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைமையகமாக செயல்படுகிறது. போர் நிலைமை காரணமாக விமானங்கள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டு சிறிய எண்ணிக்கையிலான சேவைகளை மீண்டும் இயக்கி வருகிறது. ஆனால் விமான நிலையம் தாக்குதல்களுக்கு கூடுதல் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. இந்த சம்பவம் போர் பதற்றத்தின் தாக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இந்தியர் உள்ளிட்ட அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயங்கள் ஆபத்தானவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் அதிகாரிகள் சம்பவத்தை கட்டுப்படுத்தி, விமான சேவைகளை சீராக நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications