இது ரொம்ப காஸ்ட்லியான விவாகரத்து.. துபாய் மன்னர் மனைவிக்கு ரூ.5,500 கோடிக்கு மேல் ஜீவனாம்சம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அவரது முன்னாள் மனைவி குழ்ந்தைகளுக்கு 550 மில்லியன் இங்கிலாந்து பவுண்டு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

துபாயின் மன்னர் ஷேக் முகமது பி ரஷீத் அல் மக்தூம் (72 வயது), அவருடைய முன்னாள் மனைவி ஹயா பிந்த் அல் ஹுசேன் (47 வயது), கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக ஹயா மற்றும் அவரின் 14 வயது மற்றும் 9 வயது குழந்தைகளுடன் லண்டனில் தனியாக வசித்து வருகின்றார்.

துபாய்-க்கு செல்ல குட்டியாக மாறிய கிரிப்டோகரன்சி.. புதிய Crypto Zone..!

ஜீவனாம்ச வழக்கு

ஜீவனாம்ச வழக்கு

இதற்கிடையில் தான் இந்த ஜீவனாம்ச வழக்கு நீண்ட நாட்களாக நடந்து வருகின்றது. இந்த வழக்கின் தீர்ப்பானது தற்போது தான் வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் இளவரசர் ஷேக் முகமது, இளவரசி ஹயாவுக்கு தெரியாமல், கடந்த 2019ம் ஆண்டில் ஷரியா சட்டத்தின் கீழ் விவாகரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5,500 கோடிக்கு மேல் ஜீவனாம்சம்

ரூ.5,500 கோடிக்கு மேல் ஜீவனாம்சம்

மேலும் இந்த தீர்ப்பில் இளவரசி ஹயாவுக்கும், அவரின் குழந்தைகளுக்கும் சேர்த்து 550 மில்லியன் பவுண்டுகள், இந்திய ரூபாயில் சுமார் 5,529.21 கோடி ரூபாய்க்கும் மேலாக ஜீவனாம்சம் வழங்க தீர்ப்பு வந்துள்ளது.

ஷேக் முகமது அவரின் 6வது மனைவி ஹயாவுக்கு 2,524 கோடி ரூபாய் ஜீவனாம்சமும், அவரது குழந்தைகள் அல் ஜலீலா(14 வயது), சயீத் (9 வயது) ஆகியோருக்கு 2,911 கோடி ரூபாய் ஜீவனாம்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காஸ்ட்லியான விவாகரத்து?
 

காஸ்ட்லியான விவாகரத்து?

இங்கிலாந்து வரலாற்றில் இது காஸ்ட்லியான அதிகப்படியாக ஜீவனாம்சம் வழங்கப்பட்ட ஒரு விவாகரத்தாகும். சர்வதேச அளவில் இதுவும் காஸ்ட்லியான விவாகரத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது.

கடந்த 2019ல் அமேசானின் தலைவர் ஜெப் பெசோஸ் அவரது மனைவி மெக்கின்சிக்காக 38 பில்லியன் டாலர் ஜீவனாம்சமாக கொடுக்கப்பட்டது.

ரூபர்ட் முர்டோக் & அன்னா மரியா  மான்

ரூபர்ட் முர்டோக் & அன்னா மரியா மான்

இதே கடந்த 1999ம் ஆண்டில் ரூபர்ட் முர்டோக் மற்றும் அன்னா மரியா மான் விவாகரத்து வழக்கில் 1.7 பில்லியன் டாலர் ஜீவனாம்சம் வழங்க உத்தவிரப்பட்டது. முர்டோக் உலகின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான மொகல் பாக்ஸ் நியூஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் நிறுவனராவார். இது போன்ற காஸ்ட்லியான விவாகரத்துகளுடன் ஒப்பிடும்போது, துபாயின் மன்னர் ஷேக் முகமது விவாகரத்து வழக்கு சிறியது தான் என்றாலும் இதுவும் கொஞ்சம் காஸ்ட்லியான வழக்கு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dubai Ruler to pay approximately Rs5500 crore above to EX wife

Dubai Ruler to pay approximately Rs5500 crore above to EX wife/இது ரொம்ப காஸ்ட்லியான விவாகரத்து.. துபாய் மன்னர் மனைவிக்கு ரூ.5,500 கோடிக்கு மேல் ஜீவனாம்சம்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X