Dubai: துபாய் சர்வதேச நிதி மையம் (DIFC) என்றழைக்கப்படும் உலகின் முன்னணி நிதி மையத்தை மூன்று மடங்கு விரிவுபடுத்தும் பிரம்மாண்டத் திட்டத்தை துபாய் அரசு தொடங்கியுள்ளது. துபாய் என்றால் நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்ட கட்டிடங்களும், ஆடம்பரமான வசதிகளும் தான்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் துபாயில் பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை, இதற்கு முக்கியமான காரணம் துபாய் நகரத்தை விரிவாக்கம் செய்ய சரியன இடம் இல்லை என்பது தான் இந்த நிலையில் துபாய் அரசு கடந்த மாதம் சைலெண்டாக ஒரு பிரம்மாண்ட திட்டத்தை கையில் எடுத்தது.

துபாயில் ஜபீல் மாவட்ட பகுதியில் "DIFC 2.0" திட்டம் 100 பில்லியன் திர்ஹாம் மதிப்பீட்டில் அமைக்க முடிவு செய்தது. இந்த ஒரு திட்டம் துபாயை உலகின் முதல் நான்கு நிதி மையங்களில் ஒன்றாக உயர்த்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் பல லட்சம் கணக்கான இந்தியர்களுக்கு கட்டுமானம், நிர்வாகம், சேவை துறை, கார்ப்ரேட் வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளது.
2004இல் முதல் முதலாக தொடங்கப்பட்ட DIFC, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா (MEASA) பகுதிகளுக்கான முக்கிய நுழைவாயிலாக செயல்படுகிறது. பிப்ரவரி 2026 நிலவரப்படி, இங்கு 8,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன, 50,000க்கும் அதிகமான தொழில்முறை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள DIFC 2.0 என்னும்ம் விரிவாக்கத் திட்டம் 7.1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்து, மொத்த தரைப்பரப்பு 17.7 மில்லியன் சதுர அடியை எட்டும். முழுமையாக நிறைவேறும் போது, 42,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும், 1,25,000க்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டு இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, 1 மில்லியன் சதுர அடி பகுதி எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI)க்கு ஒதுக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய புதுமை மையம் மற்றும் முதல் AI வளாகம் இங்கு உருவாகும், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நிபுணர்களை ஈர்க்கும்.

மேலும், DIFC அகாடமி 3,70,000 சதுர அடி வரை விரிவடைந்து, ஆண்டுக்கு 50,000 மாணவர்களுக்கு சேவை அளிக்கும், இதன் மூலம் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களை ஈர்க்கும். பிராம்மாண்ட நகரமாக DIFC 2.0 உருவாக்க உள்ளது.
வணிக அலுவலகங்கள், சொகுசு வீடுகள், ஹோட்டல்கள், சில்லறை விற்பனை, பசுமை இடங்கள், கலாச்சார வசதிகள் உள்ளிட்டவை இத்திட்டத்தில் இடம்பெறும், ஒரு சிறப்பு ஆடிட்டோரியமும் அமையும். தற்போதைய DIFC மாவட்டத்துடன் ஒரு சிறப்பு பாலத்தால் இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த நகர்ப்புற மையமாக உருவாகும்.
ஆறு கட்டங்களாக நடைபெறும் இந்த திட்டம், 2030இல் முதல் பகுதிகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டு, 2040இல் முழுமையடையும். இது பெரும் அளவிலான வளர்ச்சியை உருவாக்கி, அதிக நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளைத் தரும், AI, FinTech போன்ற எதிர்காலத் தொழில்களில் துபாயை தலைமை இடத்துக்கு கொண்டு செல்லும், வாழ்க்கை, வேலை, பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சூழலை உருவாக்கும்.

இந்தத் திட்டம் இந்தியர்களுக்கு பெரும் ஜாக்பாட் போன்றது. இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவு மிக நெருக்கமானது என்பதால், முதலீட்டு வழிகள் எளிதாகும், நிதித் துறையில் இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில், DIFC நேரடி உலகளாவிய போட்டியாளராக உள்ளது. செப்டம்பர் 2025இல் வெளியான உலக நிதி மையங்கள் குறியீடு (GFCI 38) படி, சிங்கப்பூர் 4ஆவது இடத்தில் உள்ளது, அதேசமயம் துபாய் DIFC மூலம் டாப் 20 இடங்களில் இருந்து 2033இக்குள் முதல் 4 இடங்களை அடையும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஹெட்ஜ் ஃபண்டுகள் மற்றும் டிஜிட்டல் புதுமைகளில் DIFC வேகமாக முன்னேறி வருகிறது, இது சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு சவால் விடுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications