சீனாவினை விடாமல் துரத்தும் கொரோனா.. அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கதறும் நிறுவனங்கள்..!

பெய்ஜிங்: அப்பாடா ஒரு வழியா சீனாவை பிடித்த ஏழரை சனி தற்போது சற்று விலக தொடங்கியுள்ளது என்பது போல், கொரோனாவால் பலத்த அடி வாங்கிய சீனாவில், தற்போது சற்று கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

South Korea, Italy sound Coronavirus alarm, Sensex Sinks 806 Points, Investors Lose Rs 3 lac crores

அட என்னப்பா நீங்க? முதலில் சீனா மட்டும் தான் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை ஆட்கொள்ள தொடங்கியுள்ளது என்று கேட்பது புரிகிறது.

உதிரி பாகங்கள் கிடைக்குமா?

உதிரி பாகங்கள் கிடைக்குமா?

ஒருபுறம் சீனாவில் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தற்போது சீனா மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனால் உற்பத்தியை மீண்டும் சில தொழிற்சாலைகள் தொடங்கியுள்ளனவாம். ஒரு புறம் இது நல்ல விஷயமாக கருதப்பட்டாலும், சீனா உற்பத்தி நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை கொடுத்து வரும் மற்ற நாட்டு நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது சீர்குலைவு

இரண்டாவது சீர்குலைவு

குறிப்பாக சொல்லவேண்டுமானால் தென் கொரியா மற்றும் ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவுவதால், சீனாவின் தொழில் சாலைகளில் இரண்டாவது சீர்குலைவும் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தாற்போல் தற்போது தென் கொரியா ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக இந்த தாக்கம் அங்குள்ள சில நிறுவனங்களின் உற்பத்தியை குறைக்க தூண்டலாம். இதனால் சீனாவுக்கு தேவையாக உதிரி பாகங்கள் கிடைக்க முடியாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

கட்டுப்பாடுகள் தளர்வு

கட்டுப்பாடுகள் தளர்வு

சீனாவில் கொரோனா சற்று அதன் தாக்கத்தினை தளர்த்தியுள்ள நிலையில், பயணக்கட்டுபாடுகளும் சற்று தளர்த்தப்பட்டுள்ளனவாம். மேலும் இது சில வணிகங்களையும் திறக்க உதவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவின் உற்பத்தி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளனவாம். குறிப்பாக மின்னணு பொருட்களின் உற்பத்தி மற்றும் அசெம்பிளி பாகங்கள் மற்ற நாடுகளில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு உற்பத்தியை பாதிக்கலாம்

முழு உற்பத்தியை பாதிக்கலாம்

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சில மூலக்கூறுகளின் பற்றாக்குறை முழு உற்பத்தி செயல்முறையையும் பாதிக்க கூடும். எனவே ஜப்பானிய மற்றும் கொரிய நிறுவனங்கள் அசெம்பிளியை வழங்காவிட்டால், அவை பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியை உருவாக்கும் என்றும் ஆய்வு நிறுவனமான கவேகல் டிராகனாமிக்ஸின் தொழில்நுட்ப ஆய்வாளார் டான் வாங் கூறியுள்ளார்.

வருவாய் பாதிக்கும்

வருவாய் பாதிக்கும்

ஆப்பிள் ஐபோன் உற்பத்தியாளாரான ஃபாக்ஸ்கான் பிப்ரவரி பிற்பகுதியில் சீனாவில் அதன் முக்கிய ஆலைகளின் உற்பத்தியை மறுதொடக்கம் செய்வதாகவும், தொற்று நோய் காரணமாக தங்களது வருவாய் பாதிக்கக்கூடும் என்றும் கூறியிருந்தது.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

கொரோனா வைரஸால் உலக அளவில் 3,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 80,000 மேற்பட்டோர் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்களே. ஆனால் தற்போது தென் கொரியாவில் 4,300 மேற்பட்டோருக்கு இந்த தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய ஹாட்ஸபாட் தென் கொரியாவாகும். இதற்கு அடுத்து ஜப்பானில் 1,000 பேரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான பாதிப்பு

கடுமையான பாதிப்பு

கடந்த மாதமே கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக சீன நிறுவனங்களின் உற்பத்தி பலமாக பாதிக்கப்பட்டுள்ளதாக திங்கள் கிழமையன்று ஒரு கணக்கெடுப்பு காட்டியது. இந்த நிலையில் தென் கொரியா ஜப்பானில் நிலைமை இன்னும் மோசமானால் சீனாவில் மீண்டும் தொழிற்சாலைகள் தடுமாறக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியா ஏற்றுமதி

தென் கொரியா ஏற்றுமதி

குறிப்பாக சொல்லவேண்டுமானால் தென்கொரியாவின் மொத்த ஏற்றுமதியில் கால் பகுதியை சீனா எடுத்து கொள்கிறது. கடந்த ஆண்டு 64 பில்லியன் டாலர் மதிப்பிலான Liquid Crystal Display மற்றும் மொபைல் உதிரிபாகங்களை சீனா இறக்குமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல ஜப்பானும் தென் கொரியாவைப் போல சீனாவின் முக்கிய வர்த்தக பங்காளியாகும்.

சீனாவினை தாக்கும்

சீனாவினை தாக்கும்

ஆக அவர்களின் தொழில் சாலைகள் பணி நிறுத்தம், போக்குவரத்து துண்டிப்பு, லாகிஸ்டிக்ஸ் இடை நிறுத்தம், ஏற்றுமதியை குறைத்தல், சப்ளை குறைத்தல் உள்ளிட்டவை நேரடியாக சீன தொழில் சாலைகளை தாக்கும் என்று ஆய்வாளர்கள் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இது சீனாவின் உற்பத்தியை பெரிதும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

போராட்டம் தான்

போராட்டம் தான்

மேலும் சில நிறுவனங்கள் நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்த போதிலும், வடக்கு ஆசியா முழுவதிலும் உற்பத்தியாளர்களின் பிரச்சனைகள் மேலும் அதிகமாகியுள்ளது. ஏனெனில் சீனாவில் பல சிறு நிறுவனங்கள் ஆலைகளை இயக்குவதற்கு போதுமான தொழிலாளர்கள் இல்லை என்றும், போதிய தொழிலாளர்கள் இல்லாமல் அவைகள் போராடி வருகின்றன என்றும் கூறப்படுகிறது.

சீனாவின் நிலைமை மோசம் தான்

சீனாவின் நிலைமை மோசம் தான்

சீனாவின் நிலைமை மேம்பட்டு வருவதாக தோன்றினாலும் மறுபுறம் தென் கொரியாவும் ஜப்பானிலும் பிரச்சனைகள் தீவிரமடைந்து வருகின்றன. ஆக சீனாவில் பிரச்சனைகள் சீரடைந்த நிலையிலும், மற்ற நாடுகளின் தாக்கம் சீனாவினை இன்னும் மோசமான பாதைக்கே வழிவகுக்கும் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+