எரிமலை மின்சாரம் மூலம் பிட்காயின் உற்பத்தி.. அசரவைக்கும் குட்டி நாடு எல் சால்வடோர்..!

உலகிலேயே முதல் நாடாக மத்திய அமெரிக்கப் பகுதியில் இருக்கும் ஒரு குட்டி நாடான எல் சால்வடோர் அரசு பல அரசு அமைப்புகளின் தடை, எச்சரிக்கையைத் தாண்டி உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினை அமெரிக்க டாலரைப் போல் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான போது கிரிப்டோ சந்தையில் கலவையான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில் தற்போது மீண்டும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு கிரிப்டோ சந்தைக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

எல் சால்வடோர் நாட்டின் இப்புதிய அறிவிப்பால் உயர்ந்த பிட்காயின் விலை சில மணிநேரத்திற்குப் பின்பு சரியத் துவங்கியுள்ளது.

எல் சால்வடோர்

எல் சால்வடோர்

எல் சால்வடோர் நாட்டில் பிட்காயின் அதிகாரப்பூர்வ நாணயமாக மாறியுள்ள நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி எல் சால்வடோர் பிட்காயின் உற்பத்தியில் இறங்க முடிவு செய்துள்ளது. எல் சால்வடோர் நாட்டின் அதிபரான Nayib Bukele பிட்காயின் உற்பத்தியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்கவும் முடிவு செய்துள்ளார்.

பிட்காயின் உற்பத்தி

பிட்காயின் உற்பத்தி

பிட்காயின் உற்பத்தியில் நிலக்கரி போன்ற பாசில் எரிபொருள் அதிகமாகப் பயன்படுத்தும் காரணத்தால் மின்சாரத் தட்டுப்பாடு மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் சூற்று சூழ்நிலைப் பாதிக்கப்படுவதாக எலான் மஸ்க் உட்படப் பல முன்னணி டெக் வல்லுனர்கள் மற்றும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர்.

எல் சால்வடோர் அதிபர் நயீப்

எல் சால்வடோர் அதிபர் நயீப்

இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் Nayib Bukele பிட்காயின் உற்பத்திக்கு எரிமலை மூலம் மின்சாரம் தயாரித்து அதன் மூலம் பிட்காயின் கிரிப்டோகரன்சியை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளார். தற்போது உற்பத்தியில் இறங்கியுள்ள நிலையில் எல் சால்வடோர் நாட்டின் அதிபர் நயீப் முக்கியமான தகவலையும் வெளியிட்டுள்ளார்.

எரிமலை மின்சாரம்

எரிமலை மின்சாரம்

எரிமலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நாங்கள் தற்போது டெஸ்டிங் செய்து வருகிறோம். முதல் கட்ட உற்பத்திக்காகப் பிட்காயின் உற்பத்தி தளத்தையும் அமைத்து வருகிறோம். மேலும் தற்போது வரையில் இத்தளத்தின் மூலம் 0.0059 பிட்காயின் உற்பத்தி செய்துள்ளோம். இதன் மதிப்பு 260 டாலர் என்றும் நயீப் கூறியுள்ளார்.

சீனா கிரிப்டோ தடை

சீனா கிரிப்டோ தடை

சமீபத்தில் தான் சீன பிட்காயின் வர்த்தகம் முதல் உற்பத்தி வரையில் மொத்தமாகத் தடை செய்து மொத்த கிரிப்டோ சந்தையில் இருந்து சீனா விலகியிருக்கும் நிலையில், எல் சால்வடோர் போலவே இந்தோனேசியா, தாய்லாந்து, அமெரிக்கா, போன்ற பல நாடுகள் கிரிப்டோ வர்த்தகத்தை எப்படி முறைப்படுத்துவது என்பதை ஆய்வு செய்து வருகிறது.

பிட்காயின் மதிப்பு

பிட்காயின் மதிப்பு

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 0.46 சதவீதம் வரையில் சரிந்து 47,698.70 டாலர் வரையில் சரிந்துள்ளது. எல் சால்வடோர் அறிவிப்பு கிரிப்டோ சந்தையைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பிற முக்கியக் கிரிப்டோ மதிப்பு

பிற முக்கியக் கிரிப்டோ மதிப்பு

மேலும் எதிரியம் 3.348.55 டாலருக்கும், ரிப்பிள் 1.03 டாலருக்கு, கார்டானோ 2.18 டாலருக்கும், போல்காடாட் 30.88 டாலருக்கும், ஸ்டெல்லார் 0.3026 டாலருக்கும், டோஜ்காயின் 0.214 டாலருக்கும், செயின்லிங்க் 26.43 டாலருக்கும், யூனிஸ்வாப் 25.13 டாலருக்கும், லைட்காயின் 166.26 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+