உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் பின்னால் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், இந்தியாவிலும் எலக்ட்ரிக் பைக் / ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் எஸ்யூவி, எலக்டரிக் சரக்கு வாகனங்கள், எலக்டரிக் மின் கமர்சியல் வாகனங்கள் ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு இருந்தாலும் அதிகப்படியான விலை காரணமாக மக்கள் மத்தியில் அதிகப்படியாக விற்பனையாகவில்லை. இப்படியிருக்கும வேளையில் உலகில் எந்தொரு நாட்டிலும் நடக்காத வகையில் சீனாவில் ஒரு அற்புதம் நடந்துள்ளது.

உலகிலேயே அதிகப்படியான எலக்ட்ரிக் கார் தயாரிப்பும் விற்பனையும் சீனாவில் தான் நடக்கிறது, சீனா எலக்ட்ரிக் வாகனங்களின் களஞ்சியமாக விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடத்தில் சீனாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி பேக், தொழில்நுட்பம், தயாரிப்பு கட்டமைப்புகளின் செலவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதனால் சீனாவில் தற்போது எலக்ட்ரிக் கார்களின் விலை பெட்ரோல் கார்களை காட்டிலும் குறைவாக உள்ளது, அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மத்தியிலான போட்டி அதிகரித்துள்ளதால் டெஸ்லா, BYD உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் அதிகப்படியான விலை குறைப்பு செய்துள்ளது.
உதாரணமாக டெஸ்லா மாடல் 3 கார், சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் BMW 3 சீரியஸ் கார்-ஐ காட்டிலும் விலை குறைவு. இதேபோல் BYD Dolphin கார் அந்நாட்டில் தயாரிக்கப்படும் வோக்ஸ்வேகன் ஜெட்டா விடவும் 5000 யுவான் குறைவு, இதுவே VW Sagitar-ஐ ஒப்பிடுகையில் 125000 யுவான் குறைவு.
இதை தாண்டி சீனா அரசு எலக்ட்ரிக் வாகனங்களின் பதிவு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கிறது. இந்திய நிலையில் சீனாவில் விற்பனை செய்யப்படும் மொத்த கார்களில் சுமார் 37 சதவீதம் எலக்ட்ரிக் கார்கள் தான். இதேபோல் சீன அரசு எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிகப்படியான நிதியுதவிகளை செய்கிறது.
மேலும் ஜூலை மாத முடிவில் சீனாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்கள் பட்டியலில் டெஸ்லா மாடல் Y உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 50000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்தில் Nissan Sylphy சுமார் 37000 கார்கள் விற்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து VW Sagitar, BYD Dolphin, VW lavida, BYD Qin plus DM-i, BYD yuan plus ஆகியவை இடம்பெற்றுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications