டிவிட்டர் நிறுவன முன்னாள் ஊழியர் ஹரல்துர் தோர்லெஃப்சன் (Haraldur Thorleifsson) உடல்நல குறைவை கிண்டல் செய்யும் வகையில் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பேசியுள்ளார்.
இருவரும் ஹரல்துரின் பணி மற்றும் சம்பள பாக்கி குறித்த விவாதத்தில் கடுமையான சொற்களால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் ஹரல்துர் குறையை தவறாக புரிந்து கொண்டதாக எலான் மஸ்க் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
ஹரல்துர் தோர்லெஃப்சன்
ஹரல்துர் தோர்லெஃப்சன் டுவிட்டரில் ஹல்லி என அறியப்படுகிறார். இவருக்கு உடலில் தசைநார் தேய்வு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவர் பெரும்பாலும் வீல்சேரிலேயே அமர்ந்திருப்பார்.
இவரின் இயலாமையை கேள்வி எழுப்பும் விதமாக, எலான் மஸ்க் அவர் என்ன செய்கிறார், அவரின் குறை என்ன மேலும் அவரை வைத்துக் கொள்ள என்ன தேவை ஏற்பட்டுவிட்டது என கேள்வி எழுப்பினார்.
பிரபலமான டிவிட்டர் கணக்கு
மேலும், தோர்லெஃப்சன் கவனத்தை ஈர்க்கும் பிரபலமான மற்றும் பிசியான டிவிட்டர் அக்கவுண்டை வைத்திருக்கிறார், இதன் காரணமாக அவர் பொதுவெளியில் என்னை கேள்வி எழுப்பி, கணிசமான தொகையை பெற திட்டமிட்டார் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
எலான் மஸ்க் விமர்சனம்
இதற்கு பதில் அளித்த தோர்லெஃப்சன், தனது உடல்நிலை காரணமாக தன்னால் சிலவற்றை செய்ய முடியாது என பதில் அளித்தார். மேலும் அனைத்து விதமான உடற்தகுதி வாய்ந்த எலான் மஸ்க், கழிவறைக்குக் கூட பாதுகாப்புக்கு ஆட்களை அழைத்து செல்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
இருவரின் டிவிட்டர் மோதலில் பலர், தோர்லெஃப்சனுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். பலர் எலான் மஸ்க்-இன் செயல் மரியாதை அற்றதாகவும், ஏமாற்றத்தை அளிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். டிவிட்டர்வாசி ஒருவர் தோர்லெஃப்சன் செய்யும் பணியை பாராட்டியதோடு, எலான் மஸ்க் போன்ற நபர் தான் உங்களது குழுவில் நிச்சயம் தேவை என தெரிவித்து இருக்கிறார்.
திறமையான ஊழியர்
தோர்லெஃப்சனுடன் பணியாற்றியவர் என்ற அடிப்படையில், இந்த விவகாரம் மனதை பெருமளவு பாதிக்கிறது. இவர் திறமை, தன்னடக்கம் உள்ளிட்டவை அதிகம் கொண்டவர். தான் செய்யும் பணியில் சிறந்த தர்மத்தை கடைப்பிடிப்பவர். உங்களுக்கு எதிராக சவால் குவிந்து கிடக்கும் போது இவரை போன்றோர் உங்கள் அருகில் இருக்க வேண்டும்.
எலான் மஸ்க் மன்னிப்பு
"அவரின் சூழ்நிலையை தெரிந்து கொள்ளாததற்கு ஹாலியிடம் மன்னிப்பு கேட்க இருக்கிறேன். உங்களின் கடினமான சூழ்நிலையை தவறாக எடுத்துக் கொண்டதற்காக எனது மன்னிப்பை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். இதற்கு காரணம் எனக்கு தரப்பட்ட தவறான அல்லது அர்த்தமற்ற தகவல்கள் தான்," என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications