என்னிடமுள்ள 10% பங்குகளை விற்றுவிடலாமா.. எலான் மஸ்க் போட்ட ஒற்றை ட்வீட்.. கிடைத்த பதில்..?

உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்கள் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் , அவ்வப்போது ட்விட்டரில் அதிரடியான கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையான ஒரு விஷயமே.

இவர் வெளியிடும் ட்வீட்டுகள் ஒவ்வொன்றும், சமூக வலைதளங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியொரு தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு ட்வீட் ஒன்றை தான் தற்போது போட்டுள்ளார்.

அதிரடியான ஒரு ட்வீட்

அதிரடியான ஒரு ட்வீட்

62.5 மில்லியன் ஃபாலோவர்கள் ஃபாலோ செய்யும் தன் ட்விட்டர் பக்கத்தில், தன்னிடம் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் 10% விற்றுவிடலாமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் அதற்கு ஆம் இல்லை என்று பதிவிடுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியான சர்வே போன்ற ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

பணக்காரர்களுக்கு வரி

பணக்காரர்களுக்கு வரி

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது புதிய வரி திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளனர். இதில் மிகப்பெரிய பணக்காரர்கள் வைத்திருக்கும் பங்குகள் விற்கப்படும் போது தான், அவற்றின் மீது வரி விதிக்கப்படுகிறது. அதனால் அதற்கு முன்னதாகவே அத்தகைய பங்குகளை குறிவைத்து அதிகமான வரி விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் வசம்

எலான் மஸ்க் வசம்

இதற்கிடையில் தான் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இப்படியொரு ட்விட்டினை செய்துள்ளார். தற்போது டெஸ்லா நிறுவனத்தில் 170.5 மில்லியன் பங்குகளை வைத்துள்ளார். அவற்றில் 10% பங்குகளை விற்பனை செய்வது 21 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என ராய்ட்டர்ஸ் கணிப்புகள் கூறுகின்றது.

பணக்காரர்களை பாதிக்கும்

பணக்காரர்களை பாதிக்கும்

இதன் மூலம் 700 கோடீஸ்வரர்களை பாதிக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத்தை பாதிக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க் இந்த ட்வீட்டினை பதிவு செய்த சில மணி நேரங்களில் 55% பேர் இதற்கு பதிலளித்துள்ளனர்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

ஒரு கோடி டாலர்களுக்கும் அதிக மூலதன வருவாய் மீது 5% சொத்து வரியும், ஆண்டுக்கு 2.5 கோடி டாலர்களுக்கும் அதிக மூலதன வருவாய் மீது 8% சொத்து வரியும் விதிக்க திட்டமிட்டுள்ளார். பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்தாலும், அதன் மீது இந்த புதிய வரி விதிக்கப்படும். அவர்கள் மீது ஏற்கனவே 37 % வருமான வரி விதிக்கப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை வெளியிட்ட சமயத்திலேயே எலான் மஸ்க், கடும் எதிர்ப்பையும், தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+