ஜென்சன் ஹுவாங்கிற்கு ஆதரவாக களமிறங்கும் எலான் மஸ்க்..!! Nvidia நிறுவனத்தில் நடப்பது என்ன?

என்nvidia (Nvidia) நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், நிறுவன ஊழியர்களும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கும் அவருக்கு ஆதரவாக போர் கொடி தூக்கியுள்ளனர்.

என்விடியா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங், திருமணத்தை மீறி இரண்டு பெண்களுடன் தொடர்பில் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீன உளவு அமைப்பை சேர்ந்தவராக சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் மற்றும் என்விடியா நிறுவனத்தின் ஊழியர் கிம்பர்லி பவல் ஆகியோருடன் அவர் தொடர்பில் இருந்தது வெளி வந்தது இதனை அடுத்து அவர் தன்னுடைய பதவியையே ராஜினாமா செய்துவிட்டார்.

ஜென்சன் ஹுவாங்கிற்கு ஆதரவாக களமிறங்கும் எலான் மஸ்க்..!! Nvidia நிறுவனத்தில் நடப்பது என்ன?

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக குரல்கள் எழ தொடங்கியுள்ளன. என்விடியாவின் அடையாளமே ஜென்சன் தான். இவர் நிறுவனத்தை தலைமையேற்று நடத்துவதால் தான் பல முதலீடுகள் குவிந்தன. இந்நிலையில் அவரே பொறுப்பில் இல்லாமல் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப எடுக்க திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமை பதவியில் அமர்த்த கோரி ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் என்விடியா ஊழியர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான மனுவில் தானும் கையெழுத்திடப் போவதாக எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான மனு ஒன்று தயாராகி வருகிறது, நானும் அதில் கையெழுத்திடுகிறேன் என எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்துள்ளார். மேலும், நிறுவனத்தின் தலைவிதியை அங்கே வேலை செய்பவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நிறுவனத்தின் வாரியங்கள் அல்ல, ஏனெனில் ஊழியர்கள் தான் நிறுவனத்தின் நோக்கத்தை வடிவமைத்து நிறைவேற்றுகிறார்கள் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Also Read

ஜென்சன் ஹுவாங்குக்கு எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரவு அளிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, ஜென்சனை என்னுடைய நிறுவனத்தில் பணியில் அமர்த்த தான் தயாராக இருக்கிறேன் என கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக ஜென்சனுக்கு ஆதரவாக எலான் மஸ்க் குரல் கொடுத்து வருகிறார்.

Recommended For You

இதற்கிடையே என்விடியா நிறுவனத்திற்குள் பல ஊழியர்கள் நிறுவனத்தின் வாரியம் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்காக அதிகாரப்பூர்வமாக மனுவை தயாரித்து அவர் ஏன் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை பதிவு செய்து வருகிறார்களாம்.33 ஆண்டுகள் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்திய ஜென்சன் ஹுவாங்கின் விலகல் மற்றும் அதனை தொடர்ந்து எலான் மஸ்க்கின் இந்த அதிரடி ஆதரவு டெக் உலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+