அமெரிக்கா: உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க், உலக வல்லரசு நாட்டின் தலைவராக இருப்பவர் டொனால்ட் டிரம்ப். நெருங்கிய நட்புடன் வலம் வந்த இவ்விருவரும் தற்போது எதிரிகளாகியுள்ளனர். இருவருக்கும் இடையிலான கருத்து மோதல்கள் தற்போது எலான் மஸ்கை புதிய கட்சியையே தொடங்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபராக இருக்கக்கூடிய எலான் மஸ்க் புதிதாக கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார் . அமெரிக்கா கட்சி என்ற பெயரில் தொடங்கி இருக்கக்கூடிய இந்த கட்சி அமெரிக்கர்களுக்கு அவர்களுடைய சுதந்திரத்தை மீண்டும் வழங்கும் என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர் தான் எலான் மஸ்க். கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டதோடு அவருக்காக பல லட்சம் கோடி ரூபாயை தேர்தல் பணிகளுக்காக நன்கொடையாகவும் வழங்கினார்.

இதனை அடுத்து டிரம்பும் எலான் மஸ்கிற்கு அரசு செயல்திறன் துறை என ஒன்றை உருவாக்கி அதன் தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ள One Big Beautifull Bill எனப்படும் வரி மசோதா இருவருக்கும் இடையே பிளவினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வரி மசோதா அரசின் செலவினத்தை அதிகரிக்கும் என மஸ்க் கூறுகிறார். ஆனால் தன்னுடைய நிறுவனத்துக்கு மானியம் கிடைக்காது என்பதாலே மஸ்க் இவ்வாறு கூறுகிறார் மானியத்தை நிறுத்தினால் மஸ்க் மீண்டும் தனது பூர்வீக நாட்டிற்கே செல்ல வேண்டியது தான் என டிரம்ப் பதில் அளித்தார்.
இந்த சூழலில் எதிர்ப்பையும் மீறி புதிய வரி மசோதாவை டிரம்ப் நிறைவேற்றி இருக்கிறார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்திருக்கும் எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தான் புதிதாக கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய கட்சியின் பெயர் அமெரிக்கா கட்சி என பதிவு செய்திருக்கும் அவர் அமெரிக்க மக்களுக்கு புதிதாக ஒரு அரசியல் கட்சி தேவைப்படுகிறது, அமெரிக்காவின் இந்த இரண்டு கட்சி அமைப்பில் இருந்து மக்கள் சுதந்திரம் வேண்டுமென விரும்புகிறார்கள் அவர்களுக்கு அந்த சுதந்திரத்தை தரக்கூடிய ஒரு கட்சியாக அமெரிக்கா கட்சி இருக்கும் என அவர் பதிவு செய்திருக்கிறார்.
முன்னதாக அவர் கட்சி தொடங்குவது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்தினார் அதில் 65 சதவீதம் பேர் புதிய கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். எலான் மஸ்கின் புதிய கட்சி அறிவிப்பு அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டு அமெரிக்கா மிட் டெர்ம் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் எலான் மஸ்க் கட்சி போட்டியிடுமா என ஒரு பயனர் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எலான் மஸ்க் ஆம் என பதில் அளித்துள்ளார்.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!



Click it and Unblock the Notifications