ஓரே ட்வீட், 50 பில்லியன் டாலர் கோவிந்தா.. எலான் மஸ்க் எதிர்பார்க்காத நஷ்டம்..!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரு நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் சம்பளமாக ஒரு டாலர் கூடப் பெறுவது இல்லை, இதற்கு மாறாக ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தின் இலக்கை அடைவதன் மூலம் பங்குகளாகப் பெறுகிறார்.

சமீபத்தில் டெஸ்லா பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள காரணத்தால் எலான் மஸ்க் தற்போது அதிகளவிலான வரியைச் செலுத்த வேண்டியுள்ளது. வரி செலுத்த வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக டிவிட்டரில் அறிவித்து, இதற்கான முடிவை வாக்குகள் மூலம் எடுக்க முடிவு செய்தார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் ட்வீட்

எலான் மஸ்க் ட்வீட்

எலான் மஸ்க்-ன் இந்த ட்வீட் மற்றும் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே எலான் மஸ்க்-ன் சகோதரர் கிம்பல் மஸ்க் தனது பங்குகளை விற்பனை செய்தார். இது டெஸ்லா பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

மேலும் எலான் மஸ்க் தனது முடிவை இந்த வாக்கெடுப்பு வாயிலாகவே செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில் டெஸ்லாவில் 10 சதவீத பங்குகளை எலான் மஸ்க் விற்க வேண்டும் என அதிகளவிலானோர் வாக்கு அளித்த நிலையில் நேற்று ஒருநாளில் மட்டும் எலான் மஸ்க் 35 பில்லியன் டாலரை இழந்தார்.

 50 பில்லியன் டாலர் இழப்பு

50 பில்லியன் டாலர் இழப்பு

இந்த வாரம் மட்டும் எலான் மஸ்க் சுமார் 50 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வரலாற்றில் இரண்டு நாளில் அதிகம் இழப்பு எதிர்கொண்ட பணக்காரர் ஆக உள்ளார்.

 ஜெப் பெசோஸ்

ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்-ஐ 2019ல் விவாகரத்து செய்த போது 36 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை ஓரே நாளில் இழந்தார். இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவால் சுமார் 35 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை ஓரே நாளில் இழந்துள்ளார்.

 டெஸ்லா பங்குகள்

டெஸ்லா பங்குகள்

கடந்த இரண்டு நாட்களில் டெஸ்லா பங்குகள் 1,236 டாலரில் அளவில் இருந்து தற்போது 1,023.50 டாலருக்கு இறங்கியுள்ளது. ஆயினும் டெஸ்லா பங்குகள் விற்பனை செய்வது குறித்து எலான் மஸ்க் முடிவு எடுக்கவில்லை என்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது.

 எலான் மஸ்க் சொத்து மதிப்பு

எலான் மஸ்க் சொத்து மதிப்பு

டெஸ்லா பங்குகள் சரிவால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 2 நாளில் 50 பில்லியன் டாலர் சரிந்து 288 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த வாரம் இவருடைய சொத்து மதிப்பு 340 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. எலான் மஸ்க் தொடர்ந்து டிவிட்டர் மூலம் தன் நிறுவன முதலீட்டாளர்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+