எலான் மஸ்க்-ன் போதை மருந்து பயன்படுத்தும் பழக்கத்தால் அவருடைய சொந்த ஸ்பேஸ் அலுவலகத்திற்குள் முழுமையாக செல்ல அனுமதி கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி தொழில்நுட்பங்களில் பல புதுமைகளை கொண்டு வந்துள்ளது. மீண்டும் பயன்படுத்த கூடிய ராக்கெட், ஸ்டார்லிங்க் செயற்கைகோள்கள் என பட்டியல் போடலாம். நாசா உடனும் இணைந்து தற்போது சில திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில் உளவு செயற்கை கோள் பணிகளும் அடங்கும். அரசுடன் இணைந்து பணிபுரிவதால் இந்த திட்ட பணிகள் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை.

எனவே ஸ்பேஸ் எக்ஸின் இந்த குறிப்பிட்டதிட்ட பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று பணிபுரியும் சுமார் 400 ஊழியர்களுக்கு அரசு சார்பாக உயர் பாதுகாப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே இங்கே சென்று பணியாற்ற முடியும். இந்நிலையில் எலான் மஸ்கிற்கு இந்த உயர் பாதுகாப்பு உரிமம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிற்கு அலுவலகத்திற்கு முழுமையாக அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கான உரிமம் கிடைக்காது என சொல்லப்படுகிறது. ஏனெனில் எலான் மஸ்க் அதிக அளவில் போதை மருந்து பயன்படுத்துபவர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களோடு தகவல் தொடர்பு இருக்கிறது.
இந்த காரணங்களை சுட்டிக்காட்டி அரசு அவருக்கு வழங்க வேண்டிய அந்த செக்யூரிட்டி கிளியரன்ஸை வழங்காது என கூறப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன வழக்கறிஞர்கள் இது தொடர்பாக எலான் மஸ்கிடமும் ஆலோசனை நடத்தி இருப்பதாக தெரிகிறது.
தற்போது எலான் மஸ்க் ரகசிய பாதுகாப்பு அனுமதியை பெற்றிருக்கிறார். இதன் மூலம் சில தேசிய பாதுகாப்பு ரகசியங்களை அணுக அவருக்கு அனுமதி கிடைக்கும். ஆனால் முழுமையான அனுமதி பத்திரம் அவருக்கு வழங்கப்படவில்லை . போதை மருந்து பயன்படுத்தும் பழக்கமும், வெளிநாட்டு தலைவர்களோடு தொடர்பில் இருப்பதுமே காரணமாக சொல்லப்படுகிறது.
தற்போது இருக்க கூடிய பாதுகாப்பு அனுமதி கூட பல ஆண்டு கால விண்ணப்பத்திற்கு பிறகு தான் அவருக்கு கிடைத்ததாம். ஆனால் அதிபர் பதவி ஏற்கும் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவராக எலான் மஸ்க் இருக்கிறார். ஏற்கனவே அரசு செயல்முறைகளை கண்காணிப்பு முக்கிய அமைப்பின் பொறுப்பாளராகவும் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டிரம்பின் தலையீட்டின் கீழ் எலான் மஸ்கிற்கு உயர் பாதுகாப்பு உரிமம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications