சர்வதேச டெக் மற்றும் சோஷியல் மீடியா துறையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்ட டிவிட்டர் - எலான் மஸ்க் டீல் தற்போது வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் டிவிட்டர் மற்றும் எலான் மஸ்க் தரப்பில் இருந்து மாறி மாறி குற்றம்சாட்டி வருவதால் டிவிட்டரின் எதிர் காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
டிவிட்டர் - எலான் மஸ்க்
டிவிட்டர் சமூக ஊடக வலையமைப்பில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவை வழங்கத் தவறினால், இந்நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் விலகிச் செல்லக்கூடும் என்று திங்கட்கிழமை டிவிட்டர் நிறுவனத்திற்கு மஸ்க் தரப்பில் அனுப்பிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
கடமைகளைத் தவறியது
ட்விட்டர் அதன் கடமைகளைச் செய்யத் தவறியுள்ளது ("clear material breach"), இதன் மூலம் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள எலான் மஸ்க்-கிற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என்று எலான் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முதல் முறையாக
டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது குறித்து முதல் முறையாக எலான் மஸ்க் எழுத்துப்பூர்வமாக எச்சரித்துள்ளார். இதற்குப் பல முறை டிவிட்டர் பதிவு மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவித்து வந்தார்.
ஒப்பந்தம் ஹோல்டு
எலான் மஸ்க் முந்தைய எச்சரிக்கைகளை டிவிட்டர் ஒப்பந்தம் ஹோல்டு செய்யப்பட்டு உள்ளது என விளக்கம் கொடுத்து வந்தது. இதேபோல் எலான் மஸ்க் டிவிட்டரில் இருக்கும் ஸ்பேம் கணக்குகள், பாட்களின் எண்ணிக்கையின் தரவுகள் இருந்தால் நிறுவனத்தை மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என அறிவித்தார்.
தரவுகள்
இதுநாள் வரையில் தோராய வாய்மொழி கணக்குளை மட்டுமே டிவிட்டர் எலான் மஸ்க்-கிற்கு அளித்து வரும் நிலையில் எலான் மஸ்க் தற்போது ஒப்பந்தம் முறிவு குறித்து எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications