உலகின் பெரும் கோடீஸ்வரராக இருக்கும் எலான் மஸ்க் இளம் வயதில் இருந்து தனது தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால் அவரைப் பற்றியோ, அவருடனோ எங்கும் செல்லமாட்டார். இதனால் எலான் மஸ்க் மற்றும் அவரது சகோதரர் கம்பால் மஸ்க் பெற்றோர் விவாகரத்துக்குப் பின்பு தாயுடன் கனடாவுக்குத் தனியாகக் குடிபெயர்ந்தனர்.
எலான் மஸ்க் பெரிய அளவில் பல சாதனைகளைப் படைத்த போதும் அவருடைய தந்தை எரோல் மஸ்க் தொடர்ந்து விமர்சனம் மட்டுமே செய்து வந்தார். இதனால் எலான் மஸ்க் ஒவ்வொரு இண்டர்வியூவில் தனது குழந்தைப் பருவம், தந்தை உடனான நட்பு மோசமாக இருந்தது எனக் கூறுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்வெளிக்குச் சீறிப் பாய்ந்து பெரிய வெற்றியை அடைந்தது. இந்த நிகழ்வின் போது எலான் மஸ்க் ஏவு தளத்தில் இருந்தது மட்டும் அல்லாமல் தனது குடும்பத்தையும் இந்த நிகழ்வுக்கு அழைத்திருந்தார்.
ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவு தளத்தின் விஐபி பார்வையாளர் தளத்தில் சுமார் 100 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் உடன் எலான் மஸ்க் குடும்பமும் இருந்தது. எரோல் மஸ்க்-ன் 70வது பிறந்த நாள்-ஐ கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவும் இதே நேரத்தில் எரோல் மஸ்க் அஸ்டின் பகுதியில் இருக்கும் தனது மகள்களை சந்திக்க வந்திருந்தார், இதேநேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வரையில் எலான் மஸ்க் அழைப்புவிடுத்தார். ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவும் பணிகள் முடிந்த பின்னர் எலான் மஸ்க் - எரோல் மஸ்க் விஐபி பார்வையாளர்கள் தளத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து எலான் மஸ்க் தாய் ஹைட் மஸ்க் கூறுகையில், எலான் மஸ்க் - எரோல் மஸ்க் பல காலமாகப் பேசாமல் இருந்த நிலையில் இந்த சந்திப்பில் பேசினர், இதை பார்ப்பதற்கே மனம் நெகிழ்வாக இருந்தது, இதை நானும் என் மகள்களும் வியந்து பார்த்தோம் என தெரிவித்தார்.
ஹைட் மஸ்க் மேலும் இந்த சந்திப்பு குறித்துப் பேசுகையில் எலான் மஸ்க் - எரோல் மஸ்க் பல வருடங்களுக்குப் பின்பு பேசியதை பார்த்து மொத்த குடும்பமும் கண்ணீர் விட்டுக் கண்கலங்கியது.
கடைசியாக எலான் மஸ்க் தனது தந்தையிடம் பேசியது 2016 கேப்டவுனில் தான், அதன் பின்பு இப்போது தான் பேசுகிறார்கள். எலான் மஸ்க், எரோல் மஸ்க்-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்று இருவரும் அருகில் அமர்ந்து பேசினர் என்றும் ஹைட் மஸ்க் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications