வாஷிங்டன்: எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் Internship எனப்படும் தொழில்பயிற்சிக்கு செல்பவர்களே ஆண்டுக்கு பல லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக பெறுகின்றனர்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெயரைப் பெற்று இருப்பவர் எலான் மஸ்க். இவர் தனக்கு சொந்தமாக டெஸ்லா என்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனம், விண்வெளி தொழில்நுட்பத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சமூக ஊடகத்தில் எக்ஸ் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக இயங்கி வரக்கூடிய ஒரு நபராக இருக்கிறார். பல்வேறு தனிநபர்களுக்கும் ரோல் மாடலாக உருவாகி இருக்கும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இந்த நிறுவனங்களில் எப்படியாவது வேலை கிடைத்து விடுமா என பலரும் ஏங்கிக் கிடக்கின்றனர்.

எலான் மஸ்க் நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை பெற்று விட வேண்டும் என பலரும் தீவிரமாக முயல்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் உலகின் முன்னணி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பது மட்டுமில்லாமல் எலான் மஸ்கிற்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களிலுமே ஊழியர்களுக்கு பெரிய அளவிலான ஊதியம் கிடைக்கிறது. குறிப்பாக பயிற்சி நிலை ஊழியராக இருப்பவர்களுக்கு கூட பல லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
Space Crew தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி technology, engineering, design, business operation ஆகிய பிரிவுகளில் கல்வி பயிலக்கூடிய மாணவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் தொழில் பயிற்சிக்கு செல்ல முடியும் என கூறுகிறது. இவ்வாறு இங்கே வாய்ப்பு கிடைத்து தொழில் பயிற்சிக்காக வருபவர்களுக்கு தங்குமிடத்திற்கான செலவுகள் , கேண்டீன் அணுகல், மருத்துவ காப்பீடு மற்றும் இலவச ஜிம் மெம்பர்ஷிப் ஆகியவை கிடைக்கிறது.
இதனிடையே ஸ்பேஸ் நிறுவனத்தில் தொழில்பயிற்சிக்காக செல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் Internship வேலை செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 63,716 டாலர்கள் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் இது ஆண்டுக்கு 54 லட்சம் ரூபாய் ஆகும். அப்படி என்றால் இது மாதத்திற்கு சுமார் 4 லட்சம் ரூபாய் என கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களிலும் Internship செல்பவர்களுக்கு வழங்கக்கூடிய சராசரி ஊக்கத் தொகையை விட இது 57% அதிகமாகும். அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவில் கூட ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்படுவதில்லை. இங்கே Internship செல்பவர்களுக்கு 14,400 டாலர்கள் வழங்கப்படுகின்றன. 16 வாரங்களுக்கு இந்த தொகை வழங்கப்படுவதாக தெரிகிறது. இதன் மதிப்பு சுமார் 12 லட்சம் ரூபாய் ஆகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications