டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இந்தியாவில் தனது கார்களை அறிமுகப்படுத்த பணிபுரியும்போது பல சவால்களை எதிர்கொள்வதாக கூறியிருந்தார்.
ஆனால் சவால்கள் என்பது குறித்தான எலான் மஸ்கின் கருத்தினை அரசு தரப்பு நிராகரித்துள்ளது. மேலும் எலான் மஸ்க் சமூக ஊடகங்கள் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.
அதோடு நாட்டில் உற்பத்தி செய்யாமல், அதன் கார்களை இறக்குமதி செய்ய நினைக்கும் டெஸ்லா, அதன் கார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என டெஸ்லா விரும்புவதாகவும் பிசினஸ் டுடே செய்திகள் கூறுகின்றன.
டெஸ்லாவின் தந்திரம்
டெஸ்லாவின் இந்த தந்திரங்களுக்கு அரசு அடிபணியாது. இந்தியாவில் தற்போது பிஎல்ஐ திட்டம் ஆட்டோமொபைல் துறைக்காக உள்ளது. குறிப்பாக இது மின்சார வாகனங்களுக்காக உள்ளது. ஆக இதன் கீழ் டெஸ்லா நிறுவனம் அதன் உற்பத்தியினை தொடங்கினால், அதற்கு பலன் கிடைக்கும். டெஸ்லா இந்த திட்டத்தின் மூலம் 0% வரியில் அதன் பாகங்களை கொண்டு வந்து அதனை ஒருங்கிணைக்கலாம்.
கடும் சவால்கள்
இந்த கருத்தானது ட்விட்டர் பயனர் ஒருவர், எலான் மஸ்கிடம், இந்தியாவில் எப்போது டெஸ்லா தொடங்கப்படும்? இது குறித்த அப்டேட் ஏதும் உள்ளதா? என்று கேட்டதற்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க், இந்திய அரசுடன் இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம் என்று பதிலளித்த பிறகு வந்துள்ளது.
எடுபடாத பேச்சு வார்த்தை
கடந்த 2019ம் ஆண்டு முதலே இந்தியாவில் தனது டெஸ்லா காரினை விற்பனை செய்ய நினைக்கும் மஸ்க், வரி விகிதம் என்பது அதிகமாக இருப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றார். இது குறித்து பிரதமர் மோடியிடம் டெஸ்லா நிறுவனம் பலமுறை பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால் இறுதி வரையில் ஒரு சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
40% ஆக வரியை குறையுங்கள்
40,000 டாலருக்கு மேலான விலையுள்ள ஒரு காருக்கு 100% மேலாக வரி கேட்பது, அதற்கு பெரும் தடையாக உள்ளது. பெரும்பாலான டெஸ்லா கார்களின் விலையானது 40,000 டாலர்களுக்கு மேல் இருக்கும். இந்தியாவின் இந்த வரி விகிதத்தினை 40% ஆக குறைக்க வேண்டும் என்று, தொடர்ந்து எலான் மஸ்க் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கு உற்பத்தி செய்யுங்கள்
இந்திய அரசு உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரிகளை அதிகளவில் வைத்துள்ளது. முன்னதாக அரசு டெஸ்லா கார்களை இந்தியாவிலேயே தயாரிக்குமாறும், இறக்குமதி செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Elon musk's Tesla trying to put pressure, reduce import duty on tesla cars/வரியை குறைக்க அழுத்தம் கொடுக்கும் எலான் மஸ்க்.. உண்மையா.. அரசு கோரிக்கையை ஏற்குமா?


Click it and Unblock the Notifications