உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2 வருடத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் டெக் சேவைகளின் எழுச்சி என மொத்த வர்த்தகச் சந்தையும் புதிய பரிமாண வளர்ச்சியை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் புதிய வளர்ச்சிப் பாதையில் எலான் மஸ்க் யாரும் தொட முடியாத உயரத்தைத் தொட்டு உள்ளார். வேகமாக வளரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்த நாசா கொடுத்த ஆர்டர், ஸ்டார்லிங்க் சேவை விரிவாக்கம் என எலான் மஸ்க் தலைமை வகிக்கும் அனைத்து நிறுவனமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
டெஸ்லா நிறுவனம்
இந்நிலையில் நேற்று டெஸ்லா நிறுவனத்திடம் அமெரிக்காவின் முன்னணி கார் ரென்டல் சேவை அளிக்கும் ஹெர்ட்ஸ் நிறுவனம் சுமார் 1,00,000 டெஸ்லா மாடல் 3 கார்களை ஆர்டர் கொடுத்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் 3 மாத வர்த்தகத்தை ஒரே நாளில் பெற்றுள்ள காரணத்தால் டெஸ்லா மீதான முதலீடு தாறுமாறாக அதிகரித்தது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பு
நேற்றே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் விரைவில் டெஸ்லா நிறுவனம் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடையும் எனக் கணித்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 24 மணிநேரத்திற்குள் புதிய உயர்வை எட்டி சாதனை படைத்து அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்லா 52 வார உயர்வு
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 905 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட டெஸ்லா பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 1,045.02 டாலர் வரையில் உயர்ந்து 52 வார உயர்வைப் பதிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் முதல் முறையாக டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு
இந்தத் தடாலடி வளர்ச்சியின் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 289 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 36.2 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் 2021ல் மட்டும் 119 பில்லியன் டாலர் வரையில் இவருடைய சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
எக்சான் மொபில்
எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 289 பில்லியன் டாலராக உயர்ந்துள்ள நிலையில், எக்சான் மொபில் நிறுவனத்தின் மொத்த மதிப்பைக் காட்டிலும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது.
தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்
எலான் மஸ்க்-ன் 289 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை வைத்து என்ன செய்ய முடியும் தெரியுமா..? 159 மில்லியன் அவுன்ஸ் தங்கம் வாங்க முடியும், 3.36 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்க முடியும். அமெரிக்காவின் மொத்த ஜிடிபி-யில் 289 பில்லியன் டாலர் என்பது 1.38 சதவீதமாகும்.
ஜெப் பைசோஸ்
இந்நிலையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பைசோஸ்-ன் மொத்த சொத்து மதிப்பு 193.3 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க் மற்றும் ஜெப் பைசோஸ் மத்தியில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
உலகப் பணக்காரர்கள் பட்டியல்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் யார் முதலிடத்தைப் பிடிப்பது என்பதில் எப்போதும் ஒரு போட்டி இருக்கும், ஆனால் பில் கேட்ஸ் முதலில் இடத்தில் இருந்த போதும் சரி, தற்போது எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கும் போதும் சரி, போட்டி குறைந்து யாரும் நெருங்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்பது தான் உண்மை.
பில் கேட்ஸ்
கம்பியூட்டர், டெக் உச்சத்தில் இருக்கும் போது பில் கேட்ஸ் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பைப் பெற்றார். அதனால் அவருடைய இடத்தை யாராலும் பிடிக்கமுடியவில்லை. இதனால் நீண்ட காலம் பில் கேட்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.
எலான் மஸ்க் வேற லெவல்
இதேபோல் எலான் மஸ்க் யாரும் செல்ல முடியாத துறையில் கடும் முயற்சிகளுக்குப் பின் சாதித்து உள்ளார். இதனால் இவருடைய இடத்தைப் பிடிப்பதும் கடினம். இதுதான் பில் கேட்ஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகிய இருவரையும் தத்தம் காலகட்டத்தில் யாரும் நெருங்க முடியாத நிலைக்குக் காரணம் காரணம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications