உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், தேர்தல் நடைமுறைகளில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) குறித்து கேள்விகளை எழுப்பிய மஸ்க், அவை தேர்தலில் முறைகேடுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
ஏபிசி செய்தி அறிக்கையின்படி, பென்சில்வேனியாவில் உள்ள டவுன் ஹாலில் பேசிய மஸ்க், டொமினியன் என்று பெயரிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் முடிவுகளை மோசடி செய்ததாகக் கூறினார். இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தியதால் பிலடெல்பியா மற்றும் அரிசோனாவில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தது என்று தெரிவித்துள்ளார்.

மஸ்க் தனது உரையில், நான் ஒரு தொழில்நுட்பவியலாளர் மற்றும் கணினிகளைப் பற்றி எனக்கு நிறைய தெரியும். கணினி நிரல்களை நம்புவது ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன் ஏனெனில் ஹேக் செய்வது மிகவும் எளிதானது என்று கூறியுள்ளார்.மஸ்க் தேர்தல்களில் வாக்குச்சீட்டு மட்டுமே பயன்படுத்தப்படுவதை ஆதரிப்பதாகவும், இந்த வாக்குகளை கையால் எண்ண வேண்டும் என்று கூறினார். எனவே, இதை நடைமுறைபடுத்த அமெரிக்க மாநிலங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, டொமினியன் வோட்டிங் மெஷின் நிறுவனம் ஃபாக்ஸ் நியூஸ் மீது அவதூறு வழக்கு தொடுத்திருந்தது. மஸ்கின் இந்த அறிக்கை தேர்தல் நடைமுறை தொடர்பான விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்திலும் EVM மீது கேள்வி எழுப்பிய எலான் மஸ்க்: இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடக்கும்போது EVMகள் ஹேக் செய்யப்படலாம் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் கூறியிருந்தார். பின்னர் காங்கிரஸ் இதை ஒரு முக்கியமான பிரச்சினையாக மாற்றியது. அதற்கு பதிலளித்த பாஜகவின் சந்திரசேகர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் EVM கள் இணையத்துடன் இணைக்கப்படவில்லை எனவே அவற்றை ஹேக் செய்ய முடியாது என்று அறிக்கை அளித்தார். இவற்றை இணையத்தில் இணைத்திருந்தால் ஹேக் செய்ய வாய்ப்பு இருந்திருக்கும்’ என்றார். இந்த அறிக்கைக்குப் பிறகு இந்த விஷயம் அதிகளவில் பேசப்படவில்லை. ஆனால் இப்போது மீண்டும் EVM ஹேக்கிங் தலைப்புச் செய்திகளுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மஸ்கின் தனது அரசியல் நிலைப்பாட்டில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளராக கருதப்படுகிறார். தேர்தலுக்கு ஆதரவாக ட்ரம்பின் அரசியல் நடவடிக்கைக் குழுவுக்கு 75 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications