டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிறுவனருமான எலன் மஸ்க் உலகத்தினை மாற்ற எவ்வளவு நேரம் நாம் வேலை செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும் ஆனால் அது சாதாரண எண் அல்ல என்றும் கூறியுள்ளார்.

எலன் மஸ்க் அன்மையில் அளித்த பேட்டியில் உலகத்தினை மாற்ற எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கேட்ட போது வாரத்திற்கு 80 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். இதுவே 80 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்தால் அதன் வழி அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் மாடல் 3 சீடான் காரினை உற்பத்தி செய்ய அதிகளவில் செலவு செய்து வருவதாக எச்பிஓ பேட்டியில் எலன் மஸ்க் தெரிவித்த அடுத்த நாள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் டெஸ்லா நிறுவனம் பணத்தினை வெறித்தனமாகச் செலவு செய்து வருவதாகவும், அதில் உள்ள சிக்கல்களைக் கூடிய விரைவில் தீர்க்கவில்லை என்றால் இறப்பதை தவிர வேறு வழி இல்லை என்றும், தான் சில நேரங்களில் தொழிற்சாலையிலேயே தூங்குவதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications