பிட்காயின் மதிப்பு ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் அதன் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த வேளையில் எலான் மஸ்க் சும்மா இருக்காமல் தனது டிவிட்டரில் பிட்காயின் குறித்து ஒரு டிவீட் போட்டு உள்ளார்.
இந்த டிவீட்டால் பிட்காயின் மதிப்பு ஒரே நாளில் சுமார் 3,200 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதனால் பிட்காயின் முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் டெஸ்லா நிறுவனமும் பெரிய அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் பிட்காயின் மற்றும் டோஜ்காயினைப் பெரிய அளவில் ஆதரித்து வந்த நிலையில், பிட்காயின் உற்பத்தியில் நாட்டின் சூற்றுசூழ்நிலைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தும் காரணத்தால், தனது டெஸ்லா நிறுவனம் இனி பிட்காயினைப் பேமெண்ட் ஆகவும் ஏற்காது, அதேபோல் பிட்காயினில் டெஸ்லா இனி முதலீடு செய்யாது எனவும் தெரிவித்தார்.
பிட்காயின் பிரேக்அப்
இந்நிலையில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் பல வாரங்களுக்குப் பின் பிட்காயினைப் பிரேக்அப் செய்துவிட்டது போல் தனது டிவிட்டரில் டிவீட் செய்தார். இதுமட்டும் அல்லாமல் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்டு உள்ள வீழ்ச்சி தனக்குக் கண்ணீர் வரவழைக்கிறது என்பது போன்ற மீம்-ஐ டிவீட் செய்தார்.
பிட்காயின் விலை சரிவு
இது கிரிப்டோ சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 39,473 டாலர் வரையில் உயர்ந்த பிட்காயின் மதிப்பு இன்று 36,263 டாலர் வரையில் சரிந்து சுமார் 8 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.
சீனா தடை
பிட்காயின் மதிப்பு சீனாவின் தடைக்குப் பின்பு கடுமையான சரிவை சந்தித்துத் தொடர்ந்து தனது மதிப்பீட்டில் அதிகளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தாலும், கடந்த ஒரு வாரம் மெல்லமெல்ல வளர்ச்சி அடைந்து வந்தது. ஆனால் எலான் மஸ்க் டிவீட் மூலம் மீண்டும் சரிவை தழுவியுள்ளது பிட்காயின்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications