எலான் மஸ்கின் அமெரிக்கா கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பு பங்குச்சந்தை -அரசியல் - முதலீட்டு சந்தையில் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முந்தைய அரசுகள் பசுமை எரிசக்திக்கு அதிகப்படியான முக்கியதுவம் கொடுத்த நிலையில், டிரம்ப் அரசு ஆட்சிக்கு வந்த உடன் மீண்டும் கச்சா எண்ணெய், கனிமவள எரிசக்திக்கு அதிகப்படியான முக்கியதுவம் கொடுத்து வருவது எலான் மஸ்க்கிற்கு ஏற்புடையதாக இல்லை.
இதுதான் டிரம்ப் - எலான் மக்ஸ் மத்தியிலான நட்பில் ஏற்பட்ட விரிசலுக்கு முதலும் முக்கியமான காரணமாக உள்ளது. இந்த பிரச்சனையை தொடர்ந்து அரசுடன் பணியாற்றுவதை எலான் மஸ்க் தவிர்த்தார், டிரம்ப் - எலான் மஸ்க் அடுத்தடுத்து சரமாறியாக சமுக வலைத்தளம் வாயிலாக விமர்சனம் செய்துக்கொண்ட நிலையில். தற்போது டிரம்ப் அரசை எதிர்த்து புதிய கட்சியை துவங்கி 2026க்குள் அமெரிக்க நாடாளுமன்றத்திலும், இரு அவைகளிலும் சில இடங்களை பிடிக்க வேண்டும் என்ற இலக்கையும் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதன் விளைவாக, திங்கட்கிழமை ஆரம்ப கட்ட வர்த்தகத்தில் இருந்து சரிய துவங்கிய டெஸ்லாவின் பங்குகள் 7.5% சரிந்து, ஒரு பங்கின் விலை 291.50 டாலராகக் குறைந்து, இதன் மூலம் சந்தை மதிப்பில் சுமார் 70 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு, டெஸ்லாவின் பங்குகள் மொத்தமாக 23.04% சரிந்துள்ளன, கடந்த ஆறு மாதங்களில் 26.14%, ஒரு மாதத்தில் 5.61%, மற்றும் கடந்த ஐந்து நாட்களில் 8.85% இழப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, ஜூன் 5 அன்று, மஸ்க் மற்றும் டிரம்ப் இடையேயான சமூக ஊடக மோதல் உச்சமடைந்தபோது, டெஸ்லாவின் பங்குகள் மிகப்பெரிய ஒரு நாள் சரிவைச் சந்தித்து.
எலான் மஸ்கின் அரசியல் ஈடுபாடு சுற்றி தற்போது டெஸ்லாவுக்கு பல சவால்களும், பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது.
எலான் மஸ்கின் அரசியல்:
எலான் மஸ்க் டிவிட்டரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை தொடர்ந்து சனிக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் "American Party"யை உருவாக்குவதாக அறிவித்தார், இது அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் OBB மசோதாவிற்கு எதிராக அவரது எதிர்ப்பின் முக்கிய பகுதியாகும். One Big, Beautiful மசோதாவை எலான் மஸ்க் எதிர்த்து, அதை டிரம்ப் ஆதரித்த நிலையில், மஸ்க் DOGE அமைப்பில் இருந்து வெளியேறியது மட்டும் அல்லாமல் தற்போது டிரம்ப்-க்கு எதிராக புதிய கட்சியை துவங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
டிரம்புடனான மோதல்:
எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையேயான மோதல், சமூக ஊடகங்களில் தீவிரமடைந்து, டெஸ்லாவின் பங்கு மதிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப், மஸ்கின் புதிய கட்சி அறிவிப்பை "பைத்தியக்காரத்தனமானது" என்று விமர்சித்து, ட்ருத் சோஷியல் தளத்தில் மஸ்கை "ரயில் விபத்து" (TRAIN WRECK) போன்றது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டெஸ்லாவுக்கு நெருக்கடி:
மேலும், அமெரிக்க கருவூல அமைச்சர் ஸ்காட் பெஸ்ஸென்ட், எலான் மஸ்கின் அரசியல் முயற்சிகளை எதிர்த்து, அவரது நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு, எலான் மஸ்கை வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்துவார்கள் என நம்புவதாக கூறினார்.
டெஸ்லா வாகன டெலிவரியில் சரிவு:
டெஸ்லா 2025 ஆம் ஆண்டு 2வது காலாண்டில், நிறுவனத்தின் வாகன விநியோகம் 14% குறைந்ததாக அறிவித்துள்ளது, இது முதலீட்டாளர்களிடையே கூடுதல் கவலையை அதிகரித்துள்ளது. இந்த சரிவு, டெஸ்லாவின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
டெஸ்லா-வக்கு புது பிரச்சனை:
டெஸ்லாவுக்கு ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பாவில் வர்த்தகம் சரிந்து வரும் வேளையில் சீனாவில் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. சீனாவில் EV கார் விற்பனையில் 2வது இடத்தில் இருக்கும் டெஸ்லாவுக்கு போட்டியாக சியோமி களமிறங்கியுள்ளது. சமீபத்தில் சியோமி கார் அறிமுகத்தில் முதல் நாளிலேயே 30000 கார்களுக்கு புக்கிங் பெற்றுள்ளது.
வாடிக்கையாளர் எதிர்ப்பு:
ஆரம்பத்தில், எலான் மஸ்க் டிரம்பை ஆதரித்தபோது, வாடிக்கையாளர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. இப்போது, டிரம்புடனான மோதல் மற்றும் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு ஆகியவை, வாடிக்கையாளர்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளன. இது, டெஸ்லாவின் பிராண்ட் மதிப்பையும், வாடிக்கையாளர் விசுவாசத்தையும் பாதிக்கலாம். பலர் எலான் மஸ்க்-ன் மனநிலை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மஸ்கின் தொடர்ச்சியான அரசியல் ஈடுபாடு, டெஸ்லாவின் முதலீட்டாளர்களிடையே வெறுப்பை உருவாக்கியுள்ளது. டான் இவ்ஸ் குறிப்பிட்டபடி, மஸ்கின் அரசியல் பயணம், டெஸ்லாவின் முக்கியமான வளர்ச்சி காலகட்டத்தில் தவறான கவனச்சிதறல் என விமர்சனம் செய்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் டெஸ்லா நிறுவனத்தில் முதலீடு செய்வீர்களா..?
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications