உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், அடுத்த மாத தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் அறிமுகமாகும் என்று அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. இது, மத்திய கிழக்கு வாகன சந்தையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், இஸ்ரேல் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை செய்கிறது. ஆனால் ஆனால் வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய சந்தையான சவுதி அரேபியாவில் இதுவரை விற்பனை இல்லை.

சமீபத்திய காலங்களில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகன யூரோப்பிய விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. மேலும், குறிப்பாக எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஆதரவாக செயல்பட தொடங்கியபிறகு, அமெரிக்காவில் மஸ்க் மீது எதிர்ப்பு அதிகரித்துள்ளது. மஸ்க் அமெரிக்க அரசாங்கத்தில் பல கடும் செலவு குறைப்புகளை ஆதரித்ததால், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் டெஸ்லாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன.
இந்தநிலையில், டெஸ்லா நிறுவனம் வரும் ஏப்ரல் 10ம் தேதி சவூதி அரேபியாவின் ரியாத்தில், மிகப்பெரிய அறிமுக நிகழ்வை நடத்த உள்ளது. இந்த நிகழ்வில், டெஸ்லாவின் புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் தயாரிப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் (Robotics) வளர்ச்சிகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளது.
அதாவது, Cybercab என்ற டெஸ்லாவின் தானியங்கும் ஓட்டுநர் இல்லாத கார் (Autonomous Driving Concept) மற்றும் டெஸ்லா உருவாக்கிய Optimus என்ற மனித உருவ ரோபோட் ஆகியவற்றின் வளர்ச்சிகள் குறித்து முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இவை இரண்டும் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது. ஆனால், இந்த தயாரிப்புகள் சவூதி அரேபியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை.
மேலும், ஐரோப்பாவில் டெஸ்லாவின் விற்பனை மற்றும் சந்தைப் பங்கு இந்த ஆண்டு குறைந்துள்ள அதே சமயத்தில், கண்டம் முழுவதும் எலக்ட்ரிக் வாகன பதிவுகள் அதிகரித்துள்ளன. டெஸ்லா நிறுவனம், இந்த ஆண்டு யூரோப்பில் 42.6% என்ற அளவு குறைவான வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்று ஐரோப்பிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACEA) தரவு நேற்று அறிவித்திருந்தது. இதற்கு, எலோன் மஸ்கின் நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்கள் உலகளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதே காரணமாக கூறப்படுகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான வேலைகளை குறைத்து, வெளிநாட்டு உதவிகளை முடக்கி, ஆயிரக்கணக்கான திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்த அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தும் மஸ்க்கின் பங்கிற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் ஆர்வலர்கள் "Tesla Takedown" என்ற ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். 2023-ல் சவுதி அரேபியாவில் டெஸ்லா ஒரு தொழிற்சாலையை நிறுவுவதற்கான ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி வெளியிட்டது. ஆனால் இதற்கு எலான் மஸ்க் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
சவூதி அரேபியா தனது பொருளாதாரத்தை எண்ணெய் சார்ந்த நிலைமையில் இருந்து மாற்ற முயற்சிக்கிறது. அதே சமயம், சவூதி அரேபிய அரசின் சொந்த நிதியகம் (Sovereign Wealth Fund), Lucid Group நிறுவனத்தில் பெரும் முதலீட்டாளராக உள்ளது. Lucid Group என்பது எலக்ட்ரிக் வாகனதுறையில், டெஸ்லாவுக்கு நேரடி போட்டி நிறுவனங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications