உலகின் மிகப்பெரிய பயணிகள் சேவை விமான நிறுவனமான எமிரேட்ஸ் கடந்த 30 வருடத்தில் முதல் முறையாகக் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புக் காரணமாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
மார்ச் மாத முடிவில் எமிரேட்ஸ் நிறுவனம் சுமார் 6 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக அரபு நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து அரபு நாடுகளுக்கும், பிற நாடுகளுக்கும் விமானச் சேவைகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைக்கப்பட்டது.

இதனால் எமிரேட்ஸ் நிறுவனம் அதிகளவிலான வர்த்தகத்தை இழக்க நேரிட்டது. இதன் வாயிலாகக் கடந்த நிதியாண்டில் 22.1 பில்லியன் திராம்ஸ் அல்லது 6 பல்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.
எமிரேட்ஸ் துபாய் அரசு நிறுவனம் என்பதால் இந்நிறுவனத்திற்குத் துபாய் அரசு 11.3 பில்லியன் திராம்ஸ் அதாவது 3.1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீட்டு உட்செலுத்தியுள்ளது.
இதேபோல் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமான நிலைய சேவை நிறுவனமான dnata அரசு அறிவித்துள்ள 800 மில்லியன் டாலர் அளவிலான உதவி தொகையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் கடந்த நிதியாண்டில் மட்டும் எமிரேட்ஸ் நிறுவனம் சுமார் சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 75,145 ஆகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications