கடந்த சில வருடங்களாகவே இங்கிலாந்து அரசியலில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக கடந்த 2019ல் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இங்கிலாந்து, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது.
குறிப்பாக போரீஸ் ஜான்சன் பொருளாதாரத்தினை சரியாக கையாளவில்லை என அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் தனது பதவியில் இருந்தும் விலகினார்.
அதன் பிறகு புதிய பிரதமர் பதவிக்கு லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் வெறும் 45 நாட்கள் பதவியில் இருந்த ட்ரஸ்-ம் தனது பதிவியினை ராஜினாமா செய்துள்ளார்.
பிரிட்டன் அரசியலில் பெரும் புயல்
இது பிரிட்டன் அரசியலில் பெரும் புயலையே கிளப்பியுள்ளது எனலாம். ட்ரஸ்-ன் பொருளாதார நெருக்கடி பிரச்சனைகளை சமாளிக்க போராடினார் எனலாம். குறிப்பாக தற்போது பிரிட்டனில் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தம் உள்ளது. இதனை எப்படியேனும் மீட்டு எடுக்கும் நடவடிக்கையில் இடைக்கால மினி பட்ஜெட்டினையும் தாக்கல் செய்தார்.
மினி பட்ஜெட்
அந்த மினி பட்ஜெட்டில் சில வரிச்சலுகையும் இருந்தது. லிஸ் ட்ரஸ்-ன் நடவடிக்கையால் பிரிட்டன் பவுண்டின் மதிப்பு மிக மோசமான சரிவினைக் கண்டது. இதனால் ட்ரஸ்-ம் தவறாக பொருளாதார வளர்ச்சிக்காக தவறாக கையாண்டதாக தனது பதவியினை ராஜினாமா செய்தார்.
அடுத்த பிரதமர் யார்?
இந்த நிலையில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது? அதில் தற்போது ரிஷி சுனக் உட்பட சிலர் லிஸ்டில் உள்ளதாக தெரிகிறது. எனினும் ரிஷி சுனக் புதிய பிரதமராக வேண்டும் என ஆதரவு குரல் பெருகி வருகின்றன. ரிஷி பொருளாதாரத்தினை சரியாக கையாளுவார், அவருக்கு அனுபவம் அதிகம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொருளாதாரம் தரக்குறைப்பு
இதற்கிடையில் இங்கிலாந்து பொருளாதாரம் ஸ்டேபிள் என்ற நிலையில் இருந்து நெகடிவ் ஆக குறைத்துள்ளது. இது இங்கிலாந்தில் தொடர்ந்து பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது இங்கிலாந்து பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் ஆய்வு நிறுவனம் தரக்குறியீட்டினை குறைத்துள்ளது.
பெரும் சவால் காத்திருப்பு
பணவீக்கத்தினை குறைக்க வட்டி விகிதத்தினை மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு தேவையினை குறைக்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக முதலீடுகள் சரியலாம். மொத்தத்தில் அடுத்து வரும் இங்கிலாந்து பிரதமருக்கு பொருளாதாரத்தினை மீட்டு கொண்டு வருவது ஒரு பெரும் சவாலாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications