ரஷ்யாவுக்கு அடுத்த அடி.. ஐரோப்பிய கமிஷனின் அடுத்த திட்டம் என்ன தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐரோப்பிய கமிஷன் 9வது கட்டமாக ரஷ்யா மீது தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், இந்த தடையானது மேற்கொண்டு 200 தனி நபர் மற்றும் நிறுவனங்கள் மீது அடங்கலாம் என தெரிகிறது.

 

ஐரோப்பிய கமிஷனின் இந்த தடையால் 3 ரஷ்ய வங்கிகள் மற்றும் புதிய ஏற்றுமதி தடை மற்றும் சில முக்கிய கட்டுப்பாடுகள், முக்கிய கெமிக்கல்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி பாகங்கள் போன்ற பலவற்றை குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

9வது கட்ட பொருளாதார தடை

9வது கட்ட பொருளாதார தடை

ரஷ்யா - உக்ரைனுக்கு இடையே பல மாதங்களாகவே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகின்றது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றது. இது குளிர்காலத்தின் தொடக்கத்தில் நாட்டை முடக்க ரஷ்யா முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை பொருளாதார தடைகளின் மத்தியில், ஒன்பதாவது கட்டமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அனுமதி வேண்டும்

அனுமதி வேண்டும்

இந்த தடைகளுக்கு ஐரோப்பிய யூனியனில் உள்ள உறுப்பு நாடுகளின் அனுமதியும் தேவைப்படுவதாகவும், இதற்காக முன்மொழியப்பட்ட பெரும்பாலான நடவடிக்கைகள், அவற்றின் பிரதிநிதியான கவுன்சிலால் சில வாரங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டன. இருப்பினும் சிலவை கைவிடப்பட்டதாகவும் தெரிகிறது.

பிரச்சனைகள் அதிகரிப்பு
 

பிரச்சனைகள் அதிகரிப்பு

அக்டோபர் 5 அன்று எட்டாவது தொகுப்பு தடை பட்டியல் அங்கீகரிக்கப்பட்டது. இது பல வர்த்தக கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது. இது பெரும்பாலும் தனி நபர்களை குறிவைத்தது. மொத்தத்தில் ரஷ்யா இடையே ஐரோப்பிய ஒன்றியம் இடையே மேற்கொண்டு பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு உலக நாடுகள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம்

பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம்

மேற்கொண்டு விலைவாசியினை ஊக்கப்படுத்தலாம். பணவீக்கத்தினை அதிகரிக்கலாம். மொத்தத்தில் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு உலக நாடுகள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. .

ரஷ்யாவுக்கு பாதிப்பா?

ரஷ்யாவுக்கு பாதிப்பா?

ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளைகளால் ப்லவேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. எனினும் இப்படியேனும் ரஷ்யா முடங்குமா? என்பதே மேற்கத்திய நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: russia ரஷ்யா
English summary

EU commission plans to 9th package of sanctions against Russia

European Commission plans to impose sanctions on Russia in the 9th phase
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X