கிரீன்லாந்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என அடம்பிடித்து வரும் டிரம்ப் நிலைப்பாட்டில் தற்போது மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. சுவிஸ் நாட்டின் டாவோஸ் நகரில் நடந்து வரும் உலக பொருளாதார கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
இதேவேளையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கிரீன்லாந்து கையகப்படுத்த வேண்டும் என்ற முடிவும், அதை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பு அச்சுறுத்தலும் தான் இத்தகைய முடிவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இந்த நடவடிக்கை இரு கண்டங்களுக்கிடையேயான வர்த்தக உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக ஒப்பந்தம்
ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பா) அமெரிக்காவுடன் கடந்த ஜூலை மாதம் ஸ்காட்லாந்தின் டர்ன்பெர்ரியில் செய்த ஒப்பந்தத்தை தான் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பா அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்கும், இதேபோல் அமெரிக்க லாப்ஸ்டர்களுக்கு ஜீரோ வரி தொடரும். ஆனால் அமெரிக்கா ஐரோப்பா பொருட்களுக்கு 15 சதவீத வரியை தொடரும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்திலும், ஐரோப்பா அரசுகளின் ஒப்புதல் தேவை. இத்தகைய நிலையில் டிரம்ப்-ன் நிலைப்பாட்டின் காரணமாக இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தம் சமமாக இல்லை என்று விமர்சித்துள்ளனர். ஐரோப்பா பெரும்பாலான வரிகளை குறைக்கும் போது அமெரிக்கா 15 சதவீத வரியை தொடர்வது நியாயமற்றது என்று கூறுகின்றனர். டிரம்ப்பின் புதிய வரி அச்சுறுத்தல் இந்த ஒப்பந்தம் ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பை உடைத்துவிட்டது.
இந்த நிலையில் ஜனவரி 20 அன்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற குழு தலைவர் பெர்ன்ட் லாங்கே, "டிரம்ப்பின் அச்சுறுத்தல் டர்ன்பெர்ரி ஒப்பந்தத்தை உடைத்துவிட்டது. எனவே இந்த ஒப்பந்தத்தை அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.
ஐரோப்பாவின் இந்த முடிவு டிரம்ப்பை கோபப்படுத்தலாம். இதனால் அமெரிக்கா அரசு ஐரோப்பா மீது உடனடியாக அதிக வரிகளை விதிக்கலாம்.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications