அட்லாண்டிக் கடலின் இருபுறமும் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா வெளிப்படையாகச் சீனா, கனடா, மெக்சிகோ நாட்டின் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் உலகில் அனைத்து நாடுகள் மீதும் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதே வரியை அந்த நாட்டு பொருட்கள் மீதும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா வரி விதிக்கும் பட்டியலில் ஐரோப்பிய யூனியனும் ஒன்றாக இருப்பதால், தற்போது ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 26 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாட்டில் தயாராகும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து வரி விதித்து வருவதால், இந்த நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனா, கனடா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிக்க முடிவு செய்துள்ள நிலையில் இந்த பட்டியலில் தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது நடைமுறையில் இரு்ககும் வரி விலக்கு சலுகைகளை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரத்து செய்ய ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் மாத மத்தியில் அமெரிக்கப் பொருட்களைக் குறிவைத்துக் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைகளை அறிவிக்கவும் தயாராகி வருகிறது. இதனால் அட்லான்டிக் கடலுக்கு மறுமுனையிலும் வர்த்தக போர் வெடித்துள்ளது. இன்னும் இந்தியா மட்டும் தான் பாக்கி.
ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இதுகுறித்து கூறுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலடி நடவடிக்கைகள் அமெரிக்காவின் வரி விதிப்புக்குச் சமமான பொருளாதார அளவைக் கொண்டிருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார். ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தும் திட்டத்தை அவர் விவரித்தார்.
முதல் கட்டம் வரிவிதிப்பு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் என்றும், முழுமையான அமலாக்கம் ஏப்ரல் 13-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் ஏப்ரல் மாதம் பங்குச்சந்தை முதல் தங்கச் சந்தை வரையில் அனைத்தும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் 3வது முறையாக ஒத்திவைத்து ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் வட்டியை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவில் இருந்து பின்வாங்குவாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. ஒருபக்கம் அமெரிக்கப் பங்குச்சந்தையும், முதலீட்டு சந்தையும் மோசமான நிலையை எட்டியிருக்கும் வேளையில் டிரம்ப் தனது ரெசிப்ரோக்கல் வரி விதிப்பில் இருந்து பின்வாங்க வாய்ப்புகள் உள்ளது என கருத்து நிலவினாலும் அதை முழுமையாக ஏற்க முடியாது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் ஐரோப்பிய கமிஷன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக வான் டெர் லேயன் தெரிவித்தார். தற்போதைய வர்த்தக பிரச்சனைகளுக்கு மாற்றுத் தீர்வுகள் குறித்து விவாதிக்கவும் தயார் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளுடன் வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஐரோப்பிய தரப்பில் இருந்து வர்த்தக ஆணையர் மாரோஸ் செஃப்கோவிக்கை (Maros Sefcovic) வான் டெர் லேயன் நியமித்துள்ளார்.
புதன்கிழமை முதல் அமெரிக்கா அரசு ஐரோப்பிய நாடுகளுக்குக் கொடுத்திருந்த வரி விலக்குகள், சலுகைகள் முடிவுக்கு வந்த நிலையில் ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25% வரியை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே தற்போது 26 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் முடிவு கையில் எடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications