ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் ஆண்டுகள் கடந்தும் முடியாத நிலையில், ரஷ்யாவின் அஸ்திவாரத்தை தகர்க்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் ஐரோப்பிய ஒன்றியம் முக்கியமான அறிவிப்பை தடை உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முதல் முறையாக ஐரோப்பா வெளியிட்ட ஒரு அறிவிப்பு இந்திய நிறுவனத்தை பாதித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போரில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் உக்ரைன் பக்கம் நிற்கும் காரணத்தால், ரஷ்யாவின் உலகளாவிய வர்த்தகம், நிதி பரிமாற்றம், கச்சா எண்ணெய், வைரம் என உலகளாவிய சப்ளை செயினில் இருந்து ரஷ்யாவை மொத்தமாக ஒதுக்கி வைத்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்யா மீது 18வது முறையாக வர்த்தக தடை உத்தரவுகளை விடுத்துள்ளது. இந்த வர்த்தக தடை உத்தரவுகளில் ரஷ்யா மற்றும் உலக நாடுகள் மத்தியிலான நிதி பரிமாற்றம் மற்ரும் கச்சா எண்ணெய் வர்த்தகம் குறிவைத்து தடை உத்தரவுகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் மாபெரும் எண்ணெய் நிறுவனமான ரோஸ்னெஃப்ட்-ன் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தடைகளை விதித்துள்ளது, இதேபோல் ரஷ்யா விற்பனை செய்யும் கச்சா எண்ணெய்-ன் அதிகப்படியான விலை அளவை (oil price cap) குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ரஷ்யாவின் நிதி நிலையை மோசமாக்கும்.
விலை குறைப்பு:
உக்ரைன் உடனான போருக்கு பின்பு மேற்கத்திய நாடுகள் இணைந்து ரஷ்யாவுக்கு ஒரு முக்கியமான உத்தரவை விடுத்தது. இதில் ரஷ்யா உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்க வேண்டும் என்றால் ஒரு பேரலுக்கு அதிகப்பட்சமாக 60 டாலர் அளவில் தான் விற்க வேண்டும் என்ற கட்டுப்பட்டை விதித்திருந்தது. இன்றைய அறிவிப்பில் ரஷ்யா ஒரு பேரலை 47.60 டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த விலையை சந்தை விலையை ஒப்பிட்டு 15 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது ஐரோப்பிய யூனியன். இந்த விலையை தாண்டி விற்பனை செய்தால் ரஷ்யா மேற்கத்திய நாடுகளிடம் இருந்து எதிர்வினைகளை எதிர்கொள்ளும். டிசம்பர் 2022ல் ஐரோப்பிய யூனியன் ரஷ்ய எண்ணெய்-க்கு 60 டாலர் விலையை நிர்ணயம் செய்திருந்தது குறிபிடத்தக்கது.
இதனால் ரஷ்யா தனது கச்சா எண்ணெயை இந்தியா போன்ற நாடுகளுக்கு தற்போதைய அளவை காட்டிலும் குறைவான விலையில் விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது இந்தியாவுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது, இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-ல் 35 சதவீதம் ரஷ்யாவில் இருந்து தான் வருகிறது. இந்த விலை குறைப்பு மூலம் இந்தியாவில் விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையலாம்.
நயரா எரிசக்தி மீதான தாக்கம்:
ரஷ்யாவின் ரோஸ்னெஃப்ட், இந்தியாவின் நயரா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் 49.13% பங்கு வைத்துள்ளது. இந்த நிறுவனம் குஜராத்தின் வடிநார் பகுதியில் ஆண்டுக்கு 20 மில்லியன் டன் திறனுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறது. இதோடு இந்தியாவில் 6,750-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்-களை இயக்கி வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், இனி நயரா எனர்ஜி சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் இருக்கும் ரஷ்ய வர்த்தகத்திற்கு புது பிரச்சனையாக இருக்கும்.
புதிய தடை நடவடிக்கைகள்:
கடைசியாக ரஷ்யாவின் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் வாயிலாக (Nord Stream pipelines) சப்ளைக்கு மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் ரஷ்யா தனது கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் அதே வேளையில், இந்தியாவுக்கு குறைவான விலையில் எண்ணெய் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications