பிப்ரவரி 2023ல் இருந்து ஐரோப்பிய யூனியன் ரஷ்ய எரிபொருளை வாங்க மொத்தமாகத் தடை விதிக்கத் தொடங்கும் நிலையில் இதற்கு முன்பு ஐரோப்பிய வர்த்தகர்கள் தங்களின் எரிபொருள் தொட்டிகளில் ரஷ்ய டீசலை வாங்கி நிரப்பத் தீவிரமாக இருக்கின்றனர்.
ரஷ்யா உக்ரைன் போருக்குப் பின்பு ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் எரிபொருள், எரிவாயுவைப் பெரிய அளவில் குறைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் மாற்று எரிபொருள் ஆதாரம் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் ஐரோப்பிய யூனியன் ரஷ்ய எரிபொருளை வாங்க மொத்தமாகப் பிப்ரவரி 2023 முதல் தடை விதிக்கத் திட்டமிட்டு உள்ளது.
ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய யூனியன் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் ரஷ்ய எண்ணெய் தயாரிப்பு இறக்குமதி செய்வதை மொத்தமாகத் தடை செய்ய உள்ளது. ஐரோப்பா தற்போது டீசலுக்கு ரஷ்யாவை அதிகளவில் நம்பியுள்ளது. டிசம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான இறக்குமதியைத் தடை செய்ய உள்ளதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் டீசல் தடை அமலுக்கு வருகிறது.
126 சதவீதம் உயர்வு
ஆம்ஸ்டர்டாம்-ரோட்டர்டாம்-ஆண்ட்வெர்ப் (ARA) சேமிப்புப் பகுதிக்கான ரஷ்ய டீசல் நவம்பர் 1 முதல் நவம்பர் 12 வரையிலான காலகட்டத்தில் 215,000 bpd ஆக உயர்ந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் இருந்து 126 சதவீதம் அதிகரித்துள்ளது என்று எரிசக்தி பகுப்பாய்வு நிறுவனமான Vortexa -வின் மூத்த சந்தை ஆய்வாளர் பமீலா முங்கர் கூறினார்.
எரிபொருள் இறக்குமதி
நவம்பர் மாதத்தில் இதுவரை ஐரோப்பாவின் எரிபொருளின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவில் இருந்து டீசல் இறக்குமதி மட்டும் 44 சதவீதமாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 39 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
50 சதவீத சரிவு
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் போர் தொடுப்பதற்கு முன்பு ஐரோப்பாவின் மொத்த ரஷ்ய எரிபொருள் இறக்குமதி மற்றும் சார்ந்து இருக்கும் நிலையில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருந்தாலும், ரஷ்யா-வை கைவிட முடியாத நிலையில் தான் ஐரோப்பா உள்ளது.
ரஷ்யா - ஐரோப்பா
ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு அதிகளவில் ரஷ்யாவை நம்பியே இயங்கி வந்து. இதனால் ரஷ்யாவின் உற்பத்தியில் பெரும் பகுதி ஐரோப்பாவுக்கு மட்டும் சென்றால் ரஷ்யா - ஐரோப்பா மத்தியிலான வர்த்தகம் எவ்விதமான சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து சிறப்பாகவே இருந்தது.
ரஷ்யா எரிவாயு சப்ளை
ரஷ்யா எரிவாயு சப்ளை செய்யத் தனியாக ஒரு பைப் லைன் வைத்துள்ளது, இதனால் தற்போது ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யா மீது அதிகளவிலான தடையை விதித்தது மட்டும் அல்லாமல் டிசம்பர் 2022 முதல் கச்சா எண்ணெய், டீசல், எரிவாயுவை வாங்குவதை மொத்தமாகத் தடை செய்ய முடிவு செய்துள்ளது.
போர்
ரஷ்யா - ஐரோப்பா யூனியன் மத்தியிலான எரிபொருள் சிறப்பாக இருந்த நிலையில் இதுநாள் வரையில் ரஷ்யா வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யச் செய்யவில்லை, இதேபோல் ஐரோப்பாவும் மாற்று எரிபொருள் ஆதாரத்தைத் தேடவில்லை. இதனால் தற்போது இரு தரப்பும் மாற்று சப்ளையரையும், வர்த்தகச் சந்தையையும் தேடி வருகிறது.


Click it and Unblock the Notifications