பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்ஸ் முதல் இத்தாலி வரை தீவிரமடையும் மக்கள் போராட்டம்.. காரணம் என்ன?

ஐரோப்பிய நாடுகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் போராட்டமாக தான் காட்சி தருகிறது. பிரான்ஸ் தொடங்கி இத்தாலி, ஸ்பெயின் என பல நாடுகளிலும் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிகள், வாழ்க்கை செலவு உயர்வு, கல்வித்துறையில் நிலவும் சீர்கேடுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் நிர்வாக தோல்விகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் தொடர் போராட்டங்களால் ஐரோப்பாவே பற்றி எரிகிறது. பிரான்ஸ், இத்தாலி, அல்பேனியா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்ஸ் முதல் இத்தாலி வரை தீவிரமடையும் மக்கள் போராட்டம்.. காரணம் என்ன?

பிரான்ஸ் : விலை வாசி உயர்வால் வாழ்க்கை செலவு அதிகரித்திருப்பதை கண்டித்து, நாடு தழுவிய மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பணவீக்கம், எரிபொருள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை பொதுமக்களின் வாழ்க்கையை மிக கடினமாக்கியுள்ளது. அரசாங்கம் உடனடியாக பொருளாதார சுமையை குறைக்க வேண்டும் என கோரி தொழிற்சங்கங்களும் பொதுமக்களும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் அரசாங்கமே மக்கள் போராட்டங்களால் ஸ்தம்பித்து போய் நிற்கிறது.

இத்தாலி : இத்தாலியிலும் அரசுக்கு எதிரான அதிருப்தி உச்சத்தை எட்டியுள்ளது. விலைவாசி கட்டுப்படுத்தவில்லை மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் அலட்சியம் காட்டுவதாக கூறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் கொள்கைகள் மற்றும் நிர்வாக தோல்விகளுக்கு எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

Also Read

அல்பேனியா : அல்பேனியாவில் அரசியல் சீர்கேடுகள் மற்றும் அரசாங்கத்தின் தோல்விகளுக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளனர். நாட்டின் முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து போராட்டம் நடத்துகின்றனர். ஊழலை தடுக்கவில்லை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.

பெல்ஜியம் : கல்வித்துறையில் நிலவும் நிதி நெருக்கடியை போக்க வேண்டும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது துறை ஊழியர்கள் இணைந்து கல்வித்துறையை மேம்படுத்த கோரியும், வாழ்க்கை செலவினங்களை கட்டுப்படுத்த கோரியும் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும் இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Recommended For You

இப்படி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் வெடித்துள்ள இந்த போராட்டங்கள், அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. கோவிட் தொற்றுக்கு பின் உலக பொருளாதாரம், உக்ரைன் போர் மற்றும் அதனையொட்டிய எரிசக்தி மற்றும் உணவு பற்றாக்குறை, ஈரான் போர் ஆகியவை ஐரோப்பிய நாடுகளில் சாதாரண மக்களின் வாழ்க்கையை மிகக்கடினமாக்கியுள்ளன.

குறிப்பாக ஏஐ வருகையால் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பு , புதிதாக வேலைவாய்ப்பு சந்தைக்குள் வருவோருக்கு வேலை கிடைக்காமல் இருப்பது ஆகியவை இளைஞர்களை தெருவில் இறங்கி போராட வைத்திருக்கின்றன. இது மற்ற நாடுகளுக்கும் ஒரு வித எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+