சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சிலிக்கான் வேலி நவீன ஸ்டார்ட்அப்-களின் நகரம், புதிய கண்டுபிடிப்புகளின் நகரம் என அடுக்கி கொண்டே போகலாம். இப்படி கூறுவதில் எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு பதிவு வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சிலிக்கான் வேலியில் உபர் வாடகை டாக்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர் கூட ஸ்டார்ட்அப் நிறுவனராகவும் இருப்பது தெரியவந்துள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்காக பணியாற்றும் இந்திய பெண்மணி ஒருவர் அண்மையில் உபரில் பயணம் செய்துள்ளார்.

ரேஷம் கண்ணா என்ற ஒரு இந்திய பெண் மெட்டா நிறுவனத்திற்காக பணியாற்றுபவர். இவர் நண்பரோடு உபரில் கார் புக் செய்து பயணம் செய்துள்ளார். அப்போது வாகனத்தில் ஒரு நோட்டீஸ் ஒட்டி இருந்ததை கண்டுள்ளார். அதில் அந்த வாகன ஓட்டுனரான ஃபிரடெரிகோ கோர்ட்ரீம் என்பவர் தன்னுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு உதவுமாறு கோரியுள்ளார்.
TransChatMe என்ற ஒரு செயலியை அந்த உபர் ஓட்டுநர் உருவாக்கியுள்ளார். இதன்படி ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளை மொழிபெயர்ப்பதற்கு அதனை காபி பேஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பயனாளர்கள் அவர்களுக்கு தேவையானதை நேரடியாக அதில் டைப் செய்தாலே தானாகவே அது மொழிமாற்றம் செய்து கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
அதாவது இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இலவச மொபைல் செயலி ,உங்களுடைய தகவல்களை தானாகவே மொழிமாற்றம் செய்து கொடுக்கும் இதில் நீங்கள் காப்பி பேஸ்ட் செய்ய தேவையில்லை உங்களது மெசேஜை டைப் செய்தாலே போதும் என எழுதியிருந்தார்.
ரேஷன் கண்ணா அந்த வாகன ஓட்டுனரிடம் அவருடைய செயலி குறித்து கேட்டறிந்துள்ளார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். ரேஷன் கண்ணாவின் இந்த பதிவு பலரது கவனத்தை பெற்றுள்ளது. ஏராளமானவர்கள் அந்த ஓட்டுநரின் முயற்சியை பாராட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி பலரும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த ஓட்டுநர் ஒரே நாளிலேயே கூடுதலாக 200 பேர் தன்னுடைய செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் இந்த உதவிக்கு நன்றி என்றும் கூறி ரேஷன் கண்னாவுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். பலர் அவரது செயலியை மேம்படுத்த முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications