உலகின் மிகவும் பிசியாக இருக்கும் சூயஸ் கால்வாயில் தைவான் நாட்டின் எவர்கீரின் நிறுவனத்திற்குச் சொந்தமான எவர் கிவன் என்ற 400 அடி நீளம் கொண்டு ராட்சத சரக்கு கப்பல் இக்கால்வாயின் இரு பக்கத்தின் தரையில் மோதி சிக்கிக்கொண்டு உள்ளது.
இதனால் உலகக் கடல் வழி போக்குவரத்தில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் கொண்டு வரும் சரக்குக் கப்பல்கள் இந்தக் கால்வாயில் செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.
சூயஸ் கால்வாயில் சரக்குகள் தேக்கம்
சுமார் 2.20 லட்சம் டன் எடை கொண்ட இந்தக் கப்பலைத் தரையில் இருந்து விடுவிக்கவும், போக்குவரத்து வழியைச் சரி செய்யவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில், உலக நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சரக்குகள் சூயஸ் கால்வாயில் தேக்கம் அடைந்து பெரும் சுமையாக மாறியுள்ளது.
re-routing செய்யத் திட்டம்
சூயஸ் கால்வாய் வாயிலாக ஒரு நாளில் 50 க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் செல்லும் நிலையில் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ள இந்தத் தைவான் நாட்டுக் கப்பலான எவர் கிவன் சிக்கியுள்ளது. இந்தக் காரணத்தால் சரக்குக் கப்பல்கள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய வழித்தடத்திற்கு re-routing செய்யப்படத் திட்டமிட்டு வருகிறது.
15 நாட்கள் கூடுதல் காலம்
இந்த மாற்று வழி பயணத்தின் மூலம் கப்பல் போக்குவரத்து நேரம் சுமார் 15 நாட்கள் அதிகமாகும் என்பதால் உலக நாடுகளும், உலக நிறுவனங்களும் சரியான நேரத்தில் பொருட்கள் பெற முடியாமல் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதோடு போககுவரத்து செலவும் பெரிய அளவில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய்
சூயஸ் கால்வாய் வாயிலாகத் தான் இந்தியாவிற்குத் தினமும் சுமார் 5,00,000 பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டு உள்ள டிராபிக் ஜாம் பிரச்சனையால் இந்தியா அதிகளவில் பாதிப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆசிய நாடுகள்
இந்தியாவைத் தொடர்ந்து சீனா, தென் கொரியா, சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகப்படியான கச்சா எண்ணெய் இந்தச் சூயஸ் கால்வாய் வாயிலாகச் செல்கிறது. கடல் வழி போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இந்த டிராபிக் ஜாம் பிரச்சனையால் தென் ஆசிய நாடுகள் அதிகப் பாதிப்பு அடைய உள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள்
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளான ரஷ்யா, சவுதி அரேபியா, ஈராக், லிபியா, அல்ஜீரியா ஆகிய நாடுகள் சூயஸ் கால்வாய் வழியாகத் தினமும் குறைந்தபட்சம் தலா 2,00,000 பேரல் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது.
இந்தப் போக்குவரத்து தடையால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications