எவர்கிராண்டே இந்த பெயரால் உலக நாடுகளே சற்று அதிர்ச்சியடைந்தன எனலாம். ஏனெனில் இன்று உலகின் முதல் பொருளாதார நாடாக இருக்கும் சீனாவில், மிகப்பெரிய ரியல் ஜாம்பவான் ஆக இருந்த நிறுவனம் தான் எவர்கிராண்டே.
இந்த நிறுவனம் தான் கடன் பிரச்சனையால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இது கடன் பத்திரங்களுக்கு மட்டும் 84 மில்லியன் வட்டி செலுத்த வேண்டியுள்ளதாக அப்போது செய்திகள் வெளியானது.
ஒரு புறம் உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கே இந்த கதியா? என்ற அதிர்ச்சி இருந்தாலும், எவர்கிராண்டே குழுமம் ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் அல்ல, பற்பல துறைகளிலும் காலூன்றியுள்ளது கவனிக்கதக்கது.
எவர்கிராண்டே குழுமம் பங்கு விற்பனை
இவ்வாறு கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் இருந்து வரும் எவர்கிராண்டே நிறுவனம், அதன் ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்கிவரும் ஹெங்டென் நெட்வொர்க் குழுமத்தில் தனது முழுப் பங்கினையும் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பங்கின் மதிப்பு 273.5 மில்லியன் டாலராகும். பலத்த கடன் பிரச்சனையில் தவித்து வரும் நிலையில், அதனை குறைக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
பத்திரங்கள் முதிர்வு
எப்படியிருப்பினும் எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தற்போது வரையிலும் கூட இந்த highly likely என்ற தரத்தினை கொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இது ஒரு பெரும் சோதனையை எதிர்கொள்ள போகிறது எனலாம். ஏனெனில் 3.5 பில்லியன் டாலர் மதிப்பான பத்திரங்கள் முதிர்வு அடைய போகின்றன.
எது சாத்தியமா?
மேலும் எவர்கிராண்டே மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். அதனை நாங்கள் இன்னும் நம்புகிறோம் என ஒரு தரப்பு கூறுகின்றனர்.
மறுபுறம் எவர்கிராண்டே நிறுவனம் தற்போது புதிய வீடுகளை விற்கும் திறனை இழந்துவிட்டது. அதன் முக்கிய வணிக மாதிரி செயலிழந்துவிட்டது. ஆக கடனை திருமப செலுத்துவது கடினம். அது சாத்தியமில்லை என கூறப்படுகின்றது.
கடன் வாங்கி வணிகம்
சீனாவின் மிகப்பெரிய நிறுவனமாக எவர்கிராண்ட் 300 பில்லியன் டாலருக்கு மேல் கடன் வாங்கி விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை குறித்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது சீன அரசு. இதனால் அந்த நிறுவனம் வாங்கிய கடன்களுக்கான வட்டி செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது. இந்த நிலையில் கடன் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications