நம்முடைய உலகமே படிப்படியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. சாட் ஜிபிடி, ஜெமினி ஏஐ, கிரோக், மெடா ஏஐ ஆகிய சாட் பாட் செயலிகளாகட்டும், ஏஐ ஏஜெண்டுகள் மற்றும் பிற ஸ்மார்ட் கருவிகள் என நம் அன்றாட வாழ்வில் ஏஐ இடம் பிடிக்க தொடங்கிவிட்டது.
இத்தகைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நம்முடைய மூளைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக தற்போது ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். எக்கனாமிக் டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தொழில் நிபுணர்கள் அடிக்கடி ஏஐ கருவிகளை பயன்படுத்தும் போது அவர்களுடைய சிந்திக்கும் திறன் குறைவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பெரும்பாலானவர்கள் இது போன்ற செயலிகளோடு உணர்வு ரீதியிலான ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர் இது அவர்களை இன்னும் தனிமைக்கு கொண்டு செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டெக் ஜஸ்டீஸ் நிறுவனத்தின் தலைவரும் வழக்கறிஞருமான மீதாலி ஜெயின் அளித்துள்ள பேட்டியில் அடிக்கடி சாட் ஜிபிடி போன்ற செயலிகளை பயன்படுத்துவோர் தங்களுக்கு ஒரு வித மனநோய் ஏற்பட்டதை போன்று உணர்வை வெளிப்படுத்துகின்றனர் என தெரிவித்திருக்கிறார். கேரக்டர்.ஏஐ என்ற நிறுவனத்தின் தாக்கத்தால் அண்மையில் ஒரு 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். இதற்கான வழக்கில் வழக்கறிஞராக ஆஜராகி வரும் மிதாலி ஜெயின் இந்த தற்கொலை இது போன்ற ஏஐ செயலிகளை உருவாக்கியவர்களும் அதற்கு நிதி அளித்தவர்களுமே காரணம் என கூறுகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வினை நடத்தியது. அந்த ஆய்வில் தொடர்ந்து சாட் ஜிபிடி போன்றவற்றை பயன்படுத்துவோருக்கு மூளை செயல் திறன் குறைகிறது, நினைவுத்திறன் குறைகிறது, அவர்களின் கிரியேட்டிவிட்டி குறைகிறது என்பது தெரிய வந்திருப்பதாக கூறுகிறது. பெரும்பாலானவர்கள் வருங்காலத்தில் இது போன்ற செயலிகளை சார்ந்தவர்களாக மாறிவிடுவார்கள் என்றும் மனிதர்களுக்கே உரிய அந்த தனித்துவமான சிந்திக்கும் திறன் மறைந்து விடும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர் .

முன்னதாக சாட் ஜிபிடி தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூட சாட் ஜிபிடியை அதிகம் பயன்படுத்துவதால் மனரீதியாக பாதிக்கப்படும் பயனாளர்களை எப்படி எச்சரிக்கை செய்வது என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என கூறியிருக்கிறார். இதற்கு முன்பு சாட் ஜிபிடி பயனாளர்களை எச்சரித்த போது அவர்கள் இந்த செயலி சரியாக செயல்படவில்லை என எங்களுக்கு புகார் மெயில் அனுப்பினர் என கூறியிருக்கிறார்.
ஏஐ செயலிகள் சமூக வலைதளங்களை போல இல்லை, இவை நம் மூளையை கட்டுப்படுத்தும் வகையிலான விஷயங்களையும் உருவாக்கி நம்மை கட்டுப்படுத்த தொடங்குகின்றன என டக்ளஸ் ரெஸ்காப் என்ற எழுத்தாளர் தெரிவித்திருக்கிறார். எனவே இது போன்ற ஏஐ கருவிகளை உருவாக்கும் நிறுவனங்களும் அரசுகளும் அதனால் பயனர்களுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications