பேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.. காரணம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக அளவில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கையானது லட்சக் கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 

அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் தாக்கம் இதுவரை கிட்டதட்ட 13 லட்சத்தினை தொட்டுள்ளது. இதே பலி எண்ணிக்கையானது கிட்டதட்ட 77 ஆயிரத்தினை தொடும் நிலையில் உள்ளது.

இப்படி உலகில் மிகப்பெரிய வல்லரசு நாட்டையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கம், அந்த நாட்டில் உள்ள நிறுவனங்களையும் முடக்கியுள்ளது எனலாம்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

கொரோனா வைரஸின் தொற்றின் மையாக மாறியுள்ள அமெரிக்காவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலவேறு நிறுவனங்களும் ஜூன் மாதம் வரை தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதித்தன. ஆனால் அமெரிககாவில் கொரோனாவின் தாக்கம் இன்று வரை குறைந்ததாக தெரியவில்லை.

வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி

வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி

இதனையடுத்து இன்று வரையிலும் பல நிறுவனங்கள் இந்த ஆண்டு முழுவதும், வீட்டில் இருந்தே தங்களது ஊழியர்களை பணியாற்ற அனுமதித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான பேஸ்புக் இந்த ஆண்டு இறுதி வரை தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளது.

வீட்டில் இருந்தே பணி செய்யலாம்
 

வீட்டில் இருந்தே பணி செய்யலாம்

மேலும் பேஸ்புக் நிறுவனம் வரும் ஜூலை 6ம் தேதி நிறுவனத்தை திறக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் பணியாளர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என அறிவித்துள்ளது. அத்தியாவசியம் இருந்தால் மட்டுமே அலுவலத்திற்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சம்பளம்

தொடர்ந்து சம்பளம்

தற்போது பேஸ்புக் நிறுவனத்தில் 48,268 ஊழியர்கள் உள்ளனர். இது ஆண்டுக்கு 28 சதவீதம் அதிகரிப்பு ஆகும். பேஸ்புக் ஊழியர்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். குறைவான பணியாளர்கள், அலுவலக மூடல்கள் அல்லது அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் பணியில் ஈடுபடாமல் இருந்தாலும், தொடர்ந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

கூகுள் நிறுவனமும் அறிவுரை

கூகுள் நிறுவனமும் அறிவுரை

அதோடு ஜூன் 1ம் தேதி வரை மட்டுமே தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறு கூகுள் நிறுவனம் கூறியிருந்த நிலையில், தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதிவரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook decided to let employees WFH till year end

Facebook decided to let most of its employees to stay home at home and work at least till the end of this year.
Story first published: Friday, May 8, 2020, 18:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X