உலகின் முன்னணி சமுகவலைதளமான பேஸ்புக் செவ்வாய்க்கிழமை புதிய மையில் கல்லை அடைந்துள்ளது. உலக மக்கள் தொகையான 750 கோடியில் சுமார் 200 கோடி மக்களைத் தனது பயனர்களாகக் கொண்டு எந்த ஒரு நிறுவனமும் செய்யதாக ஒரு சமுக இணைப்பை பேஸ்புக் உருவாக்கியுள்ளது.
இந்தச் செய்தியை பேஸ்புக் நிறுவன தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் தனது போஸ்புக் கணக்கில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.
7 கண்டங்கள்
200 கோடி என்பது உலகில் ஏந்தொரு நாட்டிலும், 7 கண்டங்களில் 6 கண்டங்களில் இருக்கும் மக்கள் தொகையை விடவும் அதிகமான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்.
மார்க்
இதுகுறித்து மார்க் தனது பதிவில் கூறுகையில், இந்தக் காலையுடன் சுமார் 200 கோடி மக்களைக் கொண்டு பேஸ்புக் சமுகம் புதிய உயரத்தை அடைந்துள்ளது.
நாங்கள் உலகத்தை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறியிருந்தார்.
30 நாட்கள்
200 கோடி மக்கள் என்பது கடந்த 30 நாட்களில், அதன் பயனர்கள் மொபைல், இணையதளம், மெசஞ்சர் வாயிலாக நுழைந்தோர் எண்ணிக்கை. இது பேஸ்புக் மட்டுமானது.
இந்நிறுவனத்தின் பிற சேவையான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் வாடிக்கையாளர்களை இதில் சேர்க்கவில்லை.
டூப்பிளிகேட் அக்கவுண்ட்
மொத்த பேஸ்புக் வாடிக்கையாளர்களில் 6 சதவீதம் டூப்பிளிகேட் அக்கவுண்ட் ஆக உள்ளது எனப் பேஸ்புக் நிறுவனம் மே மாதத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்கள்
பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து வளர்ந்துக்கொண்டு இருக்கும் நிலையில், இதன் போட்டி நிறுவனமான டிவிட்டர் (32.8 கோடி), ஸ்னாப்சாட் (17 கோடி) ஆகியவற்றின் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த வருகிறது.
டென்சென்ட்
அதேபோல் சீனா நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் இருக்கும் வீசாட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 93.8 கோடியாக உள்ளது.
இரட்டிப்பு வளர்ச்சி
2012, அக்டோபர் மாதத்தில பேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 கோடியாக இருந்த நிலையில் வெறும் 4.5 வருடத்தில் இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது பேஸ்புக்.
இந்நிறுவனம் 2004ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விளம்பரதாரர்கள்
ஆன்லைன் விளம்பரத்தில் பேஸ்புக் கூகிள் நிறுவனங்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.
இந்தப் போட்டியில் தொடர்ந்து வெற்றி மற்றும் வளர்ச்சியை அடைந்து வரும் பேஸ்புக் நிறுவனத்திடம் தற்போது விளம்பரதாரர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 5 மில்லியனாக உயர்ந்துள்ளது.
வளர்ச்சி
மேலும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளைத் தாண்டி வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவிலான பங்கு வகிக்கிறது.
கடந்த வருடம் இந்த 3 நாட்களின் வர்த்தகப் பங்கிடாக 38 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இது 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications