40.5 சதவீத லாப உயர்வில் பேஸ்புக்.. புதிய விளம்பர சேவை மகத்தான வெற்றி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: உலகளவில் சமுக வலைத்தளத்தில் மிகப்பெரிய நெட்வொர்கை உருவாக்கியுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளம்பர சேவை மற்றும் மொபைல் ஆப்-களில் செய்யப்படும் விளம்பர விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் சுமார் 40.5 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

 

காலாண்டு முடிவுகள் வெளியான சில மணிநேரங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 5 சதவீதம் உயர்ந்து 109.34 டாலராக உயர்ந்தது.

சந்தைக் கணிப்புகள்

சந்தைக் கணிப்புகள்

2015ஆம் நிதியாண்டில் தொடர்ந்து 3 காலாண்டுகளாகச் சந்தை கணிப்புகளுக்கும் அதிகமான லாப அளவுகளைப் பதிவு செய்து வரும் பேஸ்புக் 3வது காலாண்டில் யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 40.5 சதவீதம் அளவிற்கு அதிகமான லாப உயர்வைச் சந்தித்துள்ளது.

செலவினம்

செலவினம்

செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் அக்குலஸ் பிரிவுகளில்ல விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகச் செலவுகள் அதிகரித்ததால், பேஸ்புக் நிறுவனத்தின் லாப அளவுகள் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

விளம்பர வருவாய்
 

விளம்பர வருவாய்

இக்காலகட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பர வருவாய் 45.4 சதவீதம் உயர்ந்து 4.30 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மொத்த வருவாயில் சுமார் 78 சதவீதம் விளம்பரத்தின் மூலம் கிடைத்த லாபமாக உள்ளது. இதில் மொபைல் விளம்பரமும் அடக்கம்.

கடந்த வருடம் இதன் அளவு 66 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர் எண்ணிக்கை

வாடிக்கையாளர் எண்ணிக்கை

பேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் இண்டர்மெட்.ஆர்க் திட்டத்தின் மூலம் புதிய இடங்களில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 1.55 பில்லியன் ஆக உள்ளது, இதில் 1.39 பில்லியன் வாடிக்கையாளர்கள் மொபைல் ஆப்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஹெரில் சான்ட்பெர்க்

ஹெரில் சான்ட்பெர்க்

நிறுவனத்தின் வளர்ச்சி குறிப்பிட்ட சில பிராந்தியங்களை மட்டும் சார்ந்து இல்லாமல், உலகளவில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் புதிய சந்தையில் நிறுவனத்திற்கு வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளதாகப் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஹெரில் சான்ட்பெர்க் தெரிவித்தார்.

ஈவுத்தொகை

ஈவுத்தொகை

பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருவாயில் நிறுவன பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 31 சென்ட் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த பத்தும் எங்களது..

இந்த பத்தும் எங்களது..

பேஸ்புக் நிறுவனம் கைபற்றிய டாப் 10 நிறுவனங்கள்!!!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook revenue, profit beat forecasts, shares hit all-time high

Facebook posted a surprisingly strong 40.5 per cent jump in quarterly revenue as new advertising services and its mobile app boosted ad sales at the world's largest social network.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X