சான் பிரான்சிஸ்கோ: உலகம் முழுக்க தனது சாம்ராஜ்ஜியத்தினை பரப்பி கொரோனாவால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ, ஏற்கனவே 7,988 பேரினை பலி கொண்டுள்ளது இந்த கொடிய வைரஸ்.
உலகம் முழுக்க 1,98,513 பேருக்கு இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் இதன் தாக்கம் சீனாவில் குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளில் பன்மடங்கு பரவி வருகிறது.
இது தான் இப்படி எனில், மறுபுறம் சர்வதேச அளவில் பொருளாதாரத்தினையும் புரட்டிபோட்டுவிடும் போல் இருக்கிறது இந்த கொரோனா.
கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை
ஆக மொத்தத்தில் உலகமே இன்று இந்த ஒத்த வைரஸால் ஆட்டம் கண்டு கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது. இதனை தங்களது நாடுகளில் அதிகம் பரவாமல் தடுக்க பல்வேறு நாடுகளும் பல விதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு புறம் விமான போக்குவரத்தினை தடை செய்துள்ள நிலையில், மக்கள் அதிகமாகக் கூடும் திரையரங்குகள், மால்கள், உணவகங்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பேஸ்புக் போனஸ் அறிவிப்பு
மேலும் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியும் படி அறிவித்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் வெறிச் சோடிக் காணப்படுவதை ஊடகங்கள் வாயிலாக காண முடிகிறது. இந்த நிலையில் பிரபலமான சமூக வலைதளமான பேஸ் புக் நிறுவனம் தனது 45,000 ஊழியர்களுக்கு 1000 டாலர்கள் போனஸ் ஆக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஊழியர்களை ஆதரிக்க போனஸ்
சரி இப்ப எதுக்கு போன்ஸ் என்று கேட்கிறீர்களா? கொடிய தொற்று நோய்க்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் தனது ஊழியர்களை ஆதரிக்கும் விதமாகத் தான் இப்படி ஒரு அதிரடி முடிவினை எடுத்துள்ளது பேஸ்புக். இது குறித்து பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் ஊழியர்களுக்கு அளித்துள்ள மெமோவில் ஆறு மாத மதிப்பாய்வுக்கான போனஸினை ஊழியர்கள் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடனும் உண்டு
பேஸ்புக் நிறுவனம் தனது சியாட்டில் மற்றும் பே ஏரியாவில் உள்ள அதிகாரிகளை ஏற்கனகே வீட்டில் இருந்து பணிபுரிமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஊழியர்கள் அறிவித்துள்ள இந்த போன்ஸ் தவிர, 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் 30,000 தகுதிவாய்ந்த சிறு வணிகங்காளுக்கு 100 மில்லியன் டாலர் ரொக்க மானியங்களையும் கடன்களையும் வழங்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சரிசரி உங்க வருத்தம் புரியுது, நம்ம நிறுவனத்துல அப்படி கொடுக்கமாட்டங்காலன்னு கேட்பது தெரியுது.. கவலைப்படாதீங்க.. கொரோனாவிடம் இருந்து முதல்ல எச்சரிக்கையா இருங்க..


Click it and Unblock the Notifications