வாஷிங்டன் : எல்லா நாடுகளையும் ஆட்டி படைக்கும் அமெரிக்காவுக்கே ஒருத்தன் தண்ணி காட்டியிருக்கானாம் அப்பு. அதுமட்டும் அல்ல கிடைத்தவற்றை வாரி சுருட்டிக் கொண்டு, வந்த வரை லாபம் என்று ஒடிப்போயிருக்கிறான்.
அதற்காக அண்ணன் செய்த வேலையெல்லாம் என்ன தெரியுமா? அதிக விலையுயர்ந்த நகைகளைத் தான் அணிவாராம். அதோடு தனி விமானம் மூலம் தான் செல்வாராம். அதோடு தனது பெராரி காரில் போலி தூதரக ரீதியிலான லைசென்ஸ் பிளேட் பொருத்தியும் வைத்துள்ளாராம்.
அதுமட்டும் இல்லையாம். அண்ணன் எங்கு சென்றாலும் சவுதி இளவரசர் என்ற தகுதிக்கான உரிமைகளை கேட்டுப்பெற்று அனுபவித்து வந்துள்ளார். அவரது ஆடம்பரமான வீட்டில் கூட சுல்தான் என்று பெயர் பலகை மாட்டியும் உள்ளராம்.
30 வருஷமா ஏமாத்திருக்கான்
பாவம் நம்ம அப்பாவி மக்கள் அண்ணன் உண்மையான இளவரசர் என நம்பி பல கோடிகளை செலவு செய்துள்ளனர். நம்ம போலி இளவரசரும் ஒன்னு ரெண்டு ஆண்டு இல்லைங்க, சுமார் 30 வருஷமா சுகமா அனுபவிச்சிட்டு இருந்திருக்கார்.
மணி அடிச்சா சோறு-இப்பவும் ஓஷி சாப்பாடுதான்
எப்படியோ பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்கிற மாதிரி அண்ணன் இப்ப தான் மாட்டிக்கிடாராம். எப்படியோ இப்பவும் ஓஷிலா தாங்க சோறு, மணி அடிச்சா சாப்பாடு அப்புறம் என்ன கவலை?
30 வருஷமா இளவரசர் தாங்க?
இப்படி 30 வருஷமா தன்னை இளவரசர் என கூறி மோசடி செய்து ஏமாற்றி வந்த அண்ணன் பேர் ஆண்டனி ஜிக்நாக், ஆமாப்பு 48 வயதான இவருக்கு செய்த ஆட்டூழியம் தான் இதெல்லாம். அதோடு மட்டும் அல்ல, இவர் அங்குள்ள மியாமி மாகாணம், பிஷர் தீவில் தனக்குத்தானே ஒரு ராஜாங்கமே நடத்தி வந்திருக்கிறாராம். தன்னைச் சுற்றிலும் மெய்க்காப்பாளர்கள் அணி வகுக்க வலம் வந்திருக்கார்ன்னா பாருங்களேன். அண்ணன் பன்ன சேட்டையெல்லாம் இதுல இருந்தே தெரிய வேண்டாம்.
பெரிய முதலீடா கிடைக்கும் இல்ல?
இதையும் நம்பி நம்ப மக்கள் சுமார் 8 மில்லியன் டாலர்களை, அதாவது இந்திய ரூபாயில 55.6 கோடி ரூபாயையும் ஏமாற்றி இருக்கிறார் நம்ம ஏமாற்றுக்கார இளவரசர். ஆமாங்க அப்படி ஆடம்பர செலவு செஞ்ச பின்னாலில் நமக்கு பெரிய அளவில் முதலீடு செய்வார் என நம்பி ஏமாந்துட்டாங்களாம். இந்த ஏமாற்று பேர் வழிகிட்ட.
18 வருஷம் ஜெயில்
இப்ப வசமா சிக்கிட்ட நம்ம போலி இளவரசர் ராஜ மரியாதையோடு, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு ஆஜர் படுத்தப்பட்டு, அங்கு அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாம் அப்பு.
வார்டன்னா எச்சரிக்கையா இருக்க சொல்லுங்க!
சவுதி இளவரசர் என்று சொல்லிக்கொண்டு போலியான தோரணையின் மூலம் சொகுசாக வாழ்ந்தவர், தற்போது சொகுசாக சிறைவாசம் அனுபவிக்கிறாராம். பாவம் அப்பு ஜட்ஜ் கிட்ட சொல்லனும் அங்க வார்டன் வேஷம் போட்டாலும் போடலாம். எச்சரிக்கையா இருக்க சொல்லனும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications