சர்வதேச முதலீட்டு மற்றும் நிதியியல் சந்தையை புரட்டிப்போட்டு உள்ள சிலிக்கான் வேலி வங்கி திவாலான நிலையில், இவ்வங்கியின் நிர்வாகம், நிதி ஆதாரங்கள், சொத்துக்கள் அனைத்தையும் அமெரிக்காவின் Federal Deposit Insurance Corporation வெள்ளிக்கிழமை கையில் எடுத்தது.
இந்த நிலையில், இதன் உயர்மட்ட நிர்வாகத்தை மொத்தமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும், அரசின் முடிவுகளை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் FDIC அமைப்பு திங்கட்கிழமை Fannie Mae என்னும் அமெரிக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கடன் சேவை அமைப்பின் முன்னாள் தலைவரான Tim Mayopoulos-ஐ சிஇஓ-வாக நியமிப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க நிதியியல் சந்தையில் திவாலான நிதி அமைப்பில் சிலிக்கான் வேலி பேங்க் 2வது இடத்தில் உள்ளது, SVB பைனான்சியல் குரூப்-ன் கிளை தான் சிலிக்கான் வேலி பேங்க்.
Fannie Mae அமைப்பு
அமெரிக்க அரசின் நிதியில் இயங்கும் Federal National Mortgage Association அமைப்பின் மறு பெயர் Fannie Mae. இந்த அமைப்பு 1968 முதல் இயங்கி வரும் வேளையில் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த முக்கியமான வர்த்தக அமைப்பை நிர்வாகம் செய்த Tim Mayopoulos-ஐ தற்போது சிலிக்கான் வேலி பேங்க்-ன் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
Tim Mayopoulos-க்கு அழைப்பு
Fannie Mae அமைப்பில் சுமார் 6 வருடங்கள் Tim Mayopoulos தலைமை தாங்கி வழிநடத்தினார், இதில் இருந்து வெளியேறிய டிம் Blend என்னும் பின்டெக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வரும் நிலையில் தான் சிலிக்கான் வேலி பேங்க்-ஐ நிர்வாகம் செய்ய அழைப்பு வந்தது.
அமெரிக்க ஸ்டார்ட்அப் அமெரிக்க ஸ்டார்ட்அப்
வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிதி ஆதாரமாக விளங்கும் சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், வென்ச்சர் கேப்பிடல் பண்ட் நிறுவனங்களும் பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டது.
சம்பளம் சிக்கல்
காரணம் அடுத்த மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் பணம் வரையில் பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த வங்கியில் தான் பணத்தை வைத்திருந்தது.
175 பில்லியன் டாலர்
இந்த வங்கி திவால் ஆகும் பட்சத்தில் இவ்வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் 250000 டாலர் மட்டுமே டெபாசிட் இன்சூரன்ஸ் ஆக வழங்கும், இதில் சிலிக்கான் வேலி பேங்க்-ல் இருக்கும் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த டெபாசிட் தொகையில் டெபாசிட் இன்சூரன்ஸ் மூலம் வெறும் 5 சதவீத தொகையை மட்டுமே மீட்டு எடுக்க உதவும்.
சிலிக்கான் வேலி பேங்க்
இந்த நிலையில் அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு ஆணையம் சிலிக்கான் வேலி பேங்க்-இன் வாடிக்கையாளர்கள் அனைவரும் திங்கள்கிழமை முதல் அவர்களின் அனைத்து வைப்புத் தொகைகளுக்கும் அணுகவும் வெளியேற்றவும் முடியும் என அறிவித்துள்ளனர்.
அமெரிக்க அரசு
அமெரிக்க அரசு இவ்வங்கிக்கு அவசரகால நிதி வழங்குவதற்கு புதிய வசதியை அளித்தனர், கூடுதலாக பெடரல் ரிசர்வ் வங்கிகள் அவசர காலங்களில் கடன் வாங்குவதை எளிதாக்கியது. இதன் மூலம் சிலிக்கான் வேலி பேங்க்-இன் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு முழுமையாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications