வாஷிங்டன்: அமெரிக்கச் சந்தையில் நிலவும் குறைவான பணவீக்க அளவு, நிதிச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை ஆகிய காரணங்களால் பெடரல் வங்கி தனது வட்டி விகித உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் சர்வதேச சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான உயர்வு காணப்படுகிறது.
பெடரல் ரிசர்வ் வங்கி
புதன் கிழமை துவங்கிய 2 நாள் கூட்டத்தின் முடிவில் பெடரல் ரிசர்வ் வங்கி, தனது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலையை மேம்படுத்த புதிய திட்டத்தை வகுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதனைக் கூடிய விரைவில் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதனால் வட்டி விகித உயர்வு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக ஒத்துவைக்கப்படுவதாகவும் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லென் தெரிவித்துள்ளார். தற்போது இதன் அளவு 3.5 சதவீதமாக உள்ளது.
ஜேனட் யெல்லென்
அமெரிக்கா சந்தை மற்றும் வர்த்தகம் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், வட்டி உயர்விற்கு உகந்த மற்றும் சாகமான நிலையில் இருக்கும் இவ்வேளையிலும் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமுமின்றிச் செயல்படத் திட்டமிட்டுள்ளோம் எனப் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லென் இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார்.
ஏன் இந்தத் திடீர் முடிவு..
அமெரிக்கச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததால் நாட்டின் பணவீக்கத்தின் அளவு 0 சதவீதமாகப் பல மாதங்கள் நிலவி வருகிறது.
மேலும் வங்கிகளில் மிகவும் குறைவான வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுவதால் அனைத்துத் துறைகளும் திடீர் வளர்ச்சி பெற்று நீர்க் குமிழியாக உருவெடுத்துள்ளது. அதேபோல் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ளது. இதனால் என்ன..?
இதனால் என்ன..?
இந்நிலையில் வட்டி விகிதத்தை உயர்த்தினால் நீர்க் குமிழிகள் உடையவும், டாலர் மதிப்பு உயர்வும் துவங்கும். இதனால் பணவீக்கத்தின் அளவு பணவாட்ட நிலைக்கும் மாறும்.
வளரும் நாடுகளுக்கும் (இந்தியா), வல்லரசு நாடுகளுக்கும் பணவாட்ட நிலை மோசமான காரணியாகும். இதனால் பெடரல் ரிசர்வ் கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பேசுகிறது.
இந்திய சந்தை
இந்தியாவிலும் கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவினால் நாட்டில் பணவாட்ட நிலை நிலவி வருகிறது. ஆனால் பெடரல் ரிசர்வ் வங்கியின் தற்போதைய முடிவுகளின் மூலம் இந்திய சந்தையில் முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும்.
நாணய சந்தை
இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இனி தொடர் உயர்வைக் காணலாம். அதுமட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.50 ரூபாய் வரை குறைய வாய்ப்புகள் உள்ளது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications