சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் ,வேலைவாய்ப்பு சந்தை மந்தமடைந்திருப்பது என பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவரான ஜெரோம் போவெல் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பங்கு சந்தைகளிலும் தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக இருக்கும் ஜெரோம் போவல் , மத்திய வங்கியின் தலைவராக தன்னுடைய கடைசி ஜேக்சன் ஹோல் உரையை ஆற்றினார். உலகமே உற்று நோக்கிய இந்த உரையில் அவர் பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்தார் . குறிப்பாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கக்கூடிய மத்திய வங்கி கூட்டத்தில் வரிவிகிதங்கள் குறைக்கப்படும் என்ற தகவலை வெளியிட்டார்.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தை மோசமடைந்து வருவதை சுட்டி காட்டிய அவர் இந்த தருணத்தில் வட்டி விகிதங்களை குறைப்பதை தவிர வேறு வாய்ப்பு இல்லை என கூறி இருக்கிறார் . ஏற்கனவே டிரம்ப் அரசு மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரக்கூடிய சூழலில் அதற்கு சாதகமான ஒரு தகவலை ஜெரோம் போவெல் வெளியிட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது, வேலை வாய்ப்பின்மை உயர்ந்து வருகிறது என குறிப்பிட்ட அவர் இரண்டையும் சமன் செய்வதற்கு பொருட்களின் விலைவாசிகளை குறைத்தாக வேண்டும், அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கி விட வேண்டும் எனவே வட்டி குறைப்பு நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் கொண்டு வந்த இறக்குமதி வரி கொள்கை சாமானிய மக்கள் வாங்கக்கூடிய பொருள்களின் மீது எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது என்றும் எதிர்வரும் மாதங்களில் அதன் நிலைமையை நம்மால் கணிக்கவே முடியாது என்றும் கூறியிருக்கிறார். இறக்குமதிக்கான செலவுகள் அதிகரிக்க போகின்றன அதன் விலையை மக்கள் தான் ஏற்க போகிறார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அடுத்த மாதம் அமெரிக்க மத்திய வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற இருக்கிறது அதில் நிச்சயமாக வட்டி குறைப்பு இருக்கும் என்பதையே தன்னுடைய உரையில் அவர் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தைகள் பாசிட்டிவான முறையில் செயல்பட தொடங்கின. போவெல்லின் இந்த அறிவிப்பின் தங்கத்தின் விலை உயர்வுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications