தீபாவளி பண்டிகை நேரத்தில் பெங்களூர் டூ சேலம் வரையிலான பஸ் டிக்கெட் கூட 1500 - 2000 ரூபாய்க்கு விற்கப்படும் வேளையில், விமான டிக்கெட் விலை நாடு முழுவதும் தாறுமாறாக அதிகரித்துள்ளது பல குடும்பங்களின் சேமிப்பைப் போக்குவரத்துக்கு மட்டுமே இழக்க வேண்டிய கட்டாயம் உருவானது.
இப்படியிருக்கையில் வெறும் 83 ரூபாய்க்கு விமான டிக்கெட் எப்படி விற்கப்படுகிறது என மக்கள் வியந்து, டக்டக்கென அதிகப்படியான டிக்கெட்-களை விற்பனை செய்துள்ளனர். இது உண்மையாகவே நடந்த சம்பவம் தான், ஆனால் இது இந்தியாவில் நடக்கவில்லை சீனாவில் நடந்துள்ளது.

சீனாவில் உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான டிக்கெட்டுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெறும் 1 டாலர் அதாவது 83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் புக்கிங் தளத்தில் வழக்கமான விமானக் கட்டணத்தைக் காட்டிலும் மிகவும் குறைவான விலையில் விற்கப்பட்ட நிலையில் சீன விமான மக்கள் வேக வேகமாக வந்து டிக்கெட்-களைப் புக்கிங் செய்தனர்.
மலிவு விலையில் டிக்கெட் விற்பனை செய்தியைக் கேட்ட பலர் உடனடியாக டிக்கெட்களை முன்பதிவு செய்தனர். திடிரென அதிகப்படியான பயணிகள் சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் தளத்தில் டிக்கெட் புக்கிங் செய்யத் துவங்கிய காரணத்தால் சில மணிநேரத்தில் டிக்கெட் புக்கிங் தளம் முடங்கியது.
இந்தத் தொழில்நுட்ப பிரச்சனை சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஆப், இணையதளம் என அனைத்திலும் எதிரொலித்தது. உதாரணமாகச் சினாவில் மிகவும் பிசியான வழித்தடமான செங்குடு முதல் ஷாங்காய் வழித்தடத்தில் ஒரு டிக்கெட் 1.37 டாலருக்கு விற்கப்பட்டு உள்ளது.
சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 10 முதல் 30 யுவான் தொகைக்கு டிக்கெட் புக் செய்யப்பட்ட ஸ்கிரீன்ஷாட்-ஐ சீன சமுக ஊடகங்களில் நிரம்பி வழிகிறது.
சில மணிநேரத்தில் பல ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்ட நிலையில் பெரும் இழப்பை சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எதிர்கொண்டாலும் அனைத்து டிக்கெட்-களும் செல்லுப்படியாகும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications