Flydubai விமான சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பா? திடீரென இப்படி ஒரு சந்தேகம் எழுவது ஏன்?

துபாய் விமான நிறுவனமான ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானி , விமானத்தை ஹைஜேக் செய்ய முயற்சி செய்ததும் இந்திய விமானி உயிரை பணையம் வைத்து அதனை தடுத்ததும் உலகம் முழுவதும் பேசு பொருளாக உள்ளது. இந்த சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி ஃப்ளைதுபாய் நிறுவன விமானம் ஒன்று துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி FZ1073 சென்றது. இந்த விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, விமானத்தின் கேப்டனாக இந்தியரான் ஸ்மித் மச்சார் ஆகியோர் இருந்தனர். அப்போது துணை விமானி, கேப்டன் ஸ்மித் மச்சார் மீது நடுவானில் திடீர் தாக்குதல் நடத்தினார்.

Flydubai விமான சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பா? திடீரென இப்படி ஒரு சந்தேகம் எழுவது ஏன்?

விமான கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்ற துணை விமானி, விமானத்திற்குள் இருந்த கிராஷ் ஆக்ஸ் (Crash axe - அவசர கால கோடாரி) கொண்டு ஸ்மித் மச்சாரை தாக்கியுள்ளார். இதனால் அந்த விமானம் திடீரென சுமார் 14,000 அடி உயரம் வரை கீழ்நோக்கிப் பாய்ந்தது. இருப்பினும், கடுமையாக போராடிய கேப்டன் ஸ்மித் மச்சார், கையில் பலத்த காயங்கள் மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியிலும் காக்பிட் கதவை திறந்தார்.

இதனை அடுத்து, பயணிகள் உடனடியாக உள்ளே நுழைந்து துணை விமானியை மடக்கி பிடித்து கட்டுப்படுத்தினர். அதன்பிறகு, அந்த விமானத்தில் இருந்த மற்றொரு விமானிகள் குழு விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்று, சவுதி அரேபியாவின் தபூக் நகரில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியது.

Also Read

இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பக ஐக்கிய அரபு அமீரகம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணையின்படி, ஓமனை சேர்ந்த அந்த துணை விமானி பயங்கரவாத செயலில் ஈடுபட முயன்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமியின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்திய விமானியின் துணிச்சலை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.

Recommended For You

ஈரான் அமெரிக்கா போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் எப்போதுமே மோதல் நடக்கும். இஸ்ரேல் தூண்டுதலின் பேரில் தான் அமெரிக்கா ஈரான் மீது போர் நடத்துகிறது என நீண்ட காலமாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் இந்த தாக்குதல் பின்னணியில் ஈரான் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் ஈரான் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என கூறியுள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பகேயி இஸ்ரேலும் போலி குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் அனுபவம் கொண்டது என்றும், அதன் ஒரு பகுதியாகவே தற்போதைய குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட ஆதாரங்களுடன் தங்கள் மீது சுமத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விமான சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+