உலகின் மூன்றாம் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜப்பானில் தொடர்ந்து வேலை வாய்ப்பு அதிகளவில் இருந்து ஊழியர்களும், தொழிலாளர்களும் கிடைப்பதில்லை என்று அன்மையில் ஜப்பான் அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
ஒருவர் 1 வேலைக்கு விண்ணப்பிக்கிறார் என்றால் 1.48 நபர்களின் வேலையைச் செய்ய வேண்டிய நிலைக்கு வேலைவாய்ப்பு அதிகளவில் ஜப்பானில் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
100 பேர் வேலையை இங்கு 67 பேர் செய்கிறார்கள்
அப்படியானால் ஒரு நிறுவனத்தில் 148 பேர் வேலைக்கு வேண்டும் என்றால் 100 நபர்கள் தான் உள்ளனர் என்று,. ஜப்பானில் 40 கடந்த 40 ஆண்டு வரலாற்றில் இது தான் அதிகளவில் தொழிலாளர் பற்றாக்குறை உடைய வருடமாகவும் கூறப்படுகின்றது.
தொழிலாளர் பற்றாக்குறை
மார்ச் மாதம் வரை 1.45 இருந்த தொழிலாளர் பற்றாக்குறை 1.48 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஜப்பானின் பொருளாதாரம் கேள்விக்குறியானதாகவும் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தியதினால் அவர்கள் அதிகச் செலவு செய்யத் துவங்கியுள்ளனர் என்றும் அதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேலையின்மை
ஜப்பானில் 1994-ம் ஆண்டு 2.8 சதவீதம் வேலையின்மை பிரச்சனை இருந்தது. இப்போது என்னவென்றால் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. பிற நாடுகளில் தங்கள் நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கத் திண்டாடி வரும் நிலையில் இங்கு மட்டும் தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
அதிபயங்கர வளர்ச்சி
ஜப்பானின் பொருளாதாரம் 10 ஆண்டுகளில் பெற வேண்டிய வளர்ச்சியை இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே பெற்றுள்ளது.
பொருளாதார மீட்சி
வலுவான ஏற்றுமதிகள் மற்றும் தனியார் நுகர்வுக்கு உதவி அளிக்கும் உத்வேகம் ஆகியவற்றின் காரணமாக ஜப்பானிய நிறுவனங்கள், ஜனவரி முதல் மார்ச் வரையிலான ஆலை மற்றும் உபகரணங்கள் மீதான தங்கள் செலவுகளை உயர்த்தியதுடன், நிலையான பொருளாதார மீட்சி மற்றும் பணவீக்கத்திற்காகத் தீர்க்கமான முடிவிற்குத் தேவைப்படும் வியாபார முதலீட்டில் ஒரு ஆரம்பப் புள்ளியைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
பங்குச் சந்தை
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது ஏற்றுமதிகள் மற்றும் உலகளாவிய தேவையை மீட்பதில் பெருமளவில் சார்ந்திருக்கிறது, உள்நாட்டு நுகர்வோர் செலவினங்கள் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை ஜப்பான் நாட்டின் பங்கு சந்தைக் குறியீடு நக்கி 2015 -ம் ஆண்டிற்குப் பிறகு முதன் முறையாக 20,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது.
அதிக உழைப்பு அதிகச் சம்பளம்
ஜப்பானின் மத்திய வங்கி கடந்த மாதம், 2018 நிதியாண்டில் விலை வளர்ச்சி 2 சதவீத இலக்கை அடைந்துவிடும் என்று கணித்துள்ளது. அதனால் அதிக ஊழைப்பை அளிக்கும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் அளிக்கும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம்
ஜப்பான் நிதி அமைச்சகம் (எம்ஓஎஃப்) வியாழன் அன்று வெளியிட்ட தரவில் நிறுவனங்கள் மூலதனச் செலவு ஜனவரி-மார்ச் மாதம் சென்ற ஆண்டு இருந்ததை விட 4.5 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications